பேருந்து விபத்து: பாடசாலை மாணவர்கள் உட்பட 15 பேர் வைத்தியசாலையில்

OruvanOruvan

Bus accident

வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியின் குமாரதாச சந்தியில் தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் 7 பேர் மற்றும் சாரதி உட்பட 15 பேர் காயமடைந்த நிலையில், வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாரதியின் கவனக்குறைவு காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றன.

இந்த நிலையில், விபத்து தொடர்பில் வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.