காலநிலை மாற்றத்தில் கடுமையாக பாதிக்கப்படும் இலங்கை: கட்டுப்படுத்த மில்லியன் கணக்கான நிதி

OruvanOruvan

காலநிலை மாற்றத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இரண்டாவது நாடாக இலங்கை இருப்பதாக காலநிலை தாக்கங்களைக் குறைப்பதற்கான அணுகுமுறைகளை வகுக்கும் திட்டத்தின் பணிப்பாளர் பந்துல சிறிமல் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ், அனர்த்த நிலைமைகள் தொடர்பான முன்னறிவிப்புத் தரவுகளை விரைவாக வழங்குவதற்காக வளிமண்டலவியல் திணைக்களம், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அமைப்புகளின் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

முன்கூட்டியே முன்னறிவிப்பு தரவுகளை வழங்குவதன் மூலம் மனித உயிர்களை மட்டுமல்லாது சொத்துக்களையும் பாதுகாக்க முடியும்.

இந்நாட்டில் ஏற்படும் அனர்த்தங்களுக்காக வருடமொன்றுக்கு 238 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படுவதாகவும், நீர்த்தேக்கங்கள் தொடர்பான அனர்த்த நிலைமைகளைத் தடுப்பதற்கு 152 மில்லியன் டொலர்கள் என மொத்தமாக 390 மில்லியன் செலவிடப்படுவதாகவும் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.

அனர்த்த நிலைமைகளைத் தணிக்க இலங்கையில் ஒரு குடும்பம் பதினெட்டாயிரம் (18,000) ரூபாவையும், ஒருவர் வருடத்திற்கு நான்காயிரம் (4,000) ரூபாவையும் செலவிட வேண்டியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.