கொழும்பு - புறக்கோட்டையில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம்: பிக்குகள் உள்ளிட்ட 29 பேர் கைது

OruvanOruvan

கொழும்பு - புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது இரு பிக்குகள் உள்ளிட்ட 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொருட்களின் விலையேற்றம், வெளிநாட்டு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து முன்னிலை சோசலிசக் கட்சி மற்றும் பொது மக்கள் இணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

போராட்டக்காரர்கள் புறக்கோட்டையை நோக்கி நகர்ந்தபோது, ​​​​பொலிஸார் கூட்டத்தை கலைக்க நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது. இந்தப் போராட்டத்தின் போது சிலரின் ஆடைகள் களையப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.