கோட்டாவின் புத்தகத்தை வாசிக்கப் போவதில்லை!: பசில் ராஜபக்‌ஷ திட்டவட்டம்

OruvanOruvan

basil rajapaksa and gotabaya rajapaksa

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எழுதி வௌியிட்டுள்ள தன்னைப் பதவி கவிழ்ப்பதற்கான சதி குறித்த புத்தகத்தை வாசிக்கப் போவதில்லை என்று பசில் ராஜபக்‌ஷ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து வௌியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர், கோட்டாபய அவ்வாறான புத்தகமொன்றை எழுதப் போவது குறித்தும், அதற்கான தகவல்கள் திரட்டிக் கொண்டிருப்பது குறித்தும் உத்தியோகப்பற்றற்ற முறையில் நான் அறிந்தே இருந்தேன்.

அதே நேரம் அவர் இதுவரை தான் வௌியிட்ட புத்தகத்தின் ஒருபிரதியை எனக்கு வழங்கவில்லை. எங்கள் கட்சியின் ஊடகப் பிரிவுக்கும் வழங்கவில்லை.

நாமல் ராஜபக்‌ஷ கூட குறித்த புத்தகத்தை புத்தக விற்பனை நிலையம் ஒன்றில் இருந்தே வாங்கியுள்ளார்.

இந்நிலையில், குறித்த புத்தகத்தை எனக்கு தராமல் விட்டதைப் பற்றி எனக்குள் அதிருப்தி ஏதும் இல்லை. அதே நேரம் அதனை நான் வாசிக்கப் போவதும் இல்லை என்றும் பசில் ராஜபக்‌ஷ தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.