10 மில்லியன் பயணிகளை வரவேற்க தயாராகும் கட்டு நாயக்க: சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

OruvanOruvan

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான பொருளாதார வேலைத்திட்டம் மற்றும் நாட்டில் உருவாக்கப்பட்ட அமைதியான சூழல் காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

அதற்கமைய விமானப் பயணிகளால் அதிகமாக பயன்படுத்தப்படும் இடமாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மாறியுள்ளதாகவும் விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் தனியார் நிறுவனத் தலைவர் அதுல கல்கெட்டிய தெரிவித்தார்.

அதன்படி 2024 ஜனவரி 1 முதல் மார்ச் 19 வரையில் 850,000 விமானப் பயணிகள் விமான நிலைய சேவைகளைப் பெற்றுக்கொண்டுள்ளதோடு, இந்த வருட இறுதிக்குள் சுமார் 10 மில்லியன் பயணிகள் விமான நிலையத்தை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2022ஆம் ஆண்டு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தைப் பயன்படுத்திய மொத்த விமானப் பயணிகளின் எண்ணிக்கை 05 மில்லியனாக இருந்ததாகவும், 2023ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கையை 08 மில்லியனாக அதிகரிக்க முடிந்ததாகவும் கல்கட்டிய சுட்டிக்காட்டினார்.