கரையோர ரயில் சேவைகள் முற்றிலும் பாதிப்பு: நான்கு ரயில் சேவைகளும் இரத்து

OruvanOruvan

Train accident in Colombo Photo Credit : Accident 1st

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதம் தடம் புரண்டதன் காரணமாக கரையோரப் பாதையில் பயணிக்கும் புகையிரத சேவைகள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டையில் இருந்து தெற்கு களுத்துறை நோக்கி நேற்று (19) இரவு 7.15 மணி அளவில் பயணித்த அதிவேக புகையிரதம் கோட்டை மற்றும் கொம்பனித்தெரு ரயில் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டதாக, புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் புகையிரத தண்டவாளத்தை அகற்றும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் ரயில்வே திணைக்கள பிரதிப் பொது முகாமையாளர் என்.ஜே. இந்திபோலகே குறிப்பிட்டார்.

ரயில் தடம் புரண்டதன் காரணமாக நேற்றிரவு காலி அஞ்சல் ரயில் உட்பட 4 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், இன்று (20) காலை கொழும்பில் இருந்து செல்லும் ரயில்கள் தாமதமாகச் செல்லும் என்றும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் ஒரு பகுதி ரயில் பாதையை காலை 7 மணிக்குள் இயக்க முடியும் என பிரதிப் பொது முகாமையாளர் என்.ஜே. இந்திபோலகே குறிப்பிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.