புளியமுனை பகுதியில் தனியார் காணியிலிருந்து வெடிகுண்டு மீட்பு: வடக்கு - கிழக்கு செய்திகள் ஒரே பார்வையில்

OruvanOruvan

21.03.2024 North & East News

புளியமுனை பகுதியில் தனியார் காணியிலிருந்து வெடிகுண்டு மீட்பு

கொக்குளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியமுனை பகுதியிலுள்ள தனியார் காணியிலிருந்து வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உரிமையாளரினால் இன்றையதினம் துப்பரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது காணியில் மோட்டார் செல் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் கொக்குளாய் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

வடக்கு மாகாண ஆளுநர் - நியூசிலாந்து துணை உயர்ஸ்தானிகர் சந்திப்பு

இலங்கைக்கான நியூசிலாந்து துணை உயர்ஸ்தானிகர் அன்ரேவ் ட்ராவெள்ளர் (Andrew Traveller), வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை இன்று (21) சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்திலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

OruvanOruvan

தமிழ் அரசியல் கைதிகளை தேர்தலுக்கு முன்னர் விடுதலை செய்ய வேண்டும்

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 தமிழ் அரசியல் கைதிகளையும் தேர்தலுக்கு முன்னர் விரைவாக விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தால் குளப்பகுதியில் மரங்கள் நாட்டி வைப்பு

இலங்கை இராணுவத்தினரால் வவுனியா - பன்றிக்பெய்த குளம் மற்றும் பம்பைமடு குளங்களை அண்டிய பகுதியில் இலுப்பைமர கன்றுகள் இன்று இராணுவத்தினரால் நாட்டி வைக்கப்பட்டது.

வவுனியாவில் 160வது பொலிஸ் வீரர்கள் தினம் அனுஸ்டிப்பு

வவுனியா பொலிஸ் நிலைய வளாகத்தில் வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் சாமந்த விஜயசேகர தலைமையில் இன்று காலை 7.30 மணியளவில் 160 ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

வெப்பம் காரணமாக தென்னம்பயிரில் தாக்கம் செலுத்தும் வெள்ளை ஈ

அதிகரித்த வெப்பம் காரணமாக வடக்கில் தென்னம்பயிரில் வெள்ளை ஈயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக தென்னை பயிர்செய்கை சபையின் முகாமையாளர் வைகுந்தன் தெரிவித்தார். வேப்பெண்ணெய் சலவைத்தூள் உள்ளிட்டவற்றை கலந்து பயிர்களுக்கு பாய்ச்சுவதனூடாக வெள்ளை ஈயின் தாகத்தை கட்டுப்படுத்த முடியும் தெரிவிக்கப்படுகின்றது.

OruvanOruvan

யாழ் பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடத்தின் சர்வதேச இந்து மாநாடு

யாழ் பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடத்தின் இரண்டாவது சர்வதேச இந்து மாநாடு நடைபெறவுள்ளது. “இந்துக் கற்கைகள் பாரம்பரியமும் இலங்கையரும்"எனும் தொனிப்பொருளில் யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் இன்று காலை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் 54 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

வட்டுக்கோட்டை படுகொலை - ஐந்தாவது சந்தேகநபர் அடையாளம்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் நபரொருவரை கடத்திச் சென்று கொலை செய்த குற்றச்சாட்டில் கைதாகியுள்ளவர்களில் ஐந்தாவது சந்தேகநபரை சம்பவத்தில் உயிரிழந்த நபரின் மனைவி அடையாளம் காண்பித்துள்ளார்.மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்று (20) இடம்பெற்ற அடையாள அணிவகுப்பில் அவர் அடையாளம் காண்பித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மயிலத்தமடு பிரச்சினைக்கு நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டோருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

கடந்த வருடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்ட போது மயிலத்தமடு மாதவனை பிரச்சினைக்கு நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் இருவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

OruvanOruvan