நில ஆக்கிரமிப்புக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்: பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடு

OruvanOruvan

Picketing

தென்னிலங்கையின் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக யாழ் பல்கலைகழக மாணவர்களால் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் பல்கலைக்கழக முன்றலில் இடம்பெற்றது.இதனை பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது தென்னிலங்கை ஆட்சியாளர்கள் தொல்பொருள் என்ற போர்வையில் வெடுக்குநாறிமலையை ஆக்கிரமிக்க முற்படுவதாக குற்றம் சாட்டிய அவர்கள், வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் தாயக பகுதி எனவும் குறிப்பிட்டிருந்தனர்.

சிங்கள பேரினவாத சக்திகள் தமிழ் மக்களின் தாயக நிலத்தை பறிப்பதற்கு முயன்றுவருவதாகவும் மாணவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இதேவேளை தமிழ்த் தலைவர்கள் எதனையும் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் அவர்கள் தூக்கத்திலிருந்து எப்போது முழித்துக் கொள்ளுவார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக பல்வேறு சுலோகங்களையும் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

OruvanOruvan

OruvanOruvan