அவுஸ்திரேலியாவின் சிறந்த இளம் சட்டத்தரணியாக இலங்கையர் தெரிவு: இரண்டு விருதுகளை தமதாக்கிய மனோஜ் பெர்னாண்டோ

OruvanOruvan

Manoj Fernando - Australia Lawyer

இலங்கை பிரஜையான மனோஜ் பெர்னாண்டோ அவுஸ்திரேலியாவின் சிறந்த இளம் சட்டத்தரணிக்கான இரண்டு விருதுகளை வெற்றிகொண்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டு டாஸ்மேனியாவின் சிறந்த இளம் சட்டத்தரணி விருது மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான அவுஸ்திரேலிய புலம்பெயர்ந்தோருக்கான இளம் அவுஸ்திரேலிய சட்டத்தரணி விருது ஆகியவற்றை பெற்றுள்ளார்.

அவுஸ்திரேலிய சட்டசபை ஆண்டுதோறும் இந்த விருது வழங்கும் நிகழ்வை நடத்தி வருகிறது. இதன்படி, குறித்த விருது வழங்கும் நிகழ்வும் இம்முறை மெல்போர்னில் கடந்த 14ஆம் திகதி நடைபெற்றுள்ளது.

2017 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த மனோஜ் பெர்னாண்டோ டாஸ்மேனியா பல்கலைக்கழகத்தில் சட்ட முதுகலைப் பட்டத்தை நிறைவு செய்து 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவுஸ்திரேலிய சட்டத்தரணியாக பயிற்சியை ஆரம்பித்துள்ளார்.

இதன்படி, குடிவரவு சட்டம் மற்றும் பொது வழக்குகள் மற்றும் சர்வதேச மாணவர்களுக்கு இலவச குடியேற்ற சட்ட ஆலோசனைகளை வழங்குவதற்காக அவுஸ்திரேலிய இளம் சட்டத்தரணிகளுடன் இணைந்து செயற்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.