வடக்கில் ஆறு மாதங்களுக்கு நீடிக்கும் வெப்பமான காலநிலை: வடக்கு - கிழக்கு செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

North-East news-2024.03.19

உடனடிபோர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்தி, புலிகளுடன் பேச்சு நடத்தி தீர்வு காணவேண்டும் என இந்திய அரசிடம் வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்த அன்னை பூபதியின் 36வது ஆண்டு நினைவேந்தல் ஆண்டின் முதலாம் நாள் நிகழ்வு இன்று நடைபெற்றது.

OruvanOruvan

வடக்கில் ஆறு மாதங்களுக்கு நீடிக்கும் வெப்பமான காலநிலை

வத மாகாணத்தில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை வெப்பநிலை உயர்வாகவே இருக்கும். ஏப்ரல், மே, ஜுன், மற்றும் ஜூலை மாதங்களில் வெப்பநிலை தற்போது உள்ளதை விடவும் உயர்வாக இருக்கும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வடக்கிற்கு விஜயம்- 278 ஏக்கர் காணிகளை விடுவிக்க ஏற்பாடு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி பலாலியில் இராணுவ கட்டுப்பாட்டில் கடந்த 33 வருடங்களாக காணப்பட்ட 278 ஏக்கர் விவசாய காணிகளை அதன் உரிமையாளர்களிடம் மீள கையளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோத மீன்பிடியை எதிர்த்து யாழில் உணவு தவிர்ப்பு போராட்டம்

இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டை கண்டித்து யாழ் மாவட்ட மீனவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

வெடுக்குநாறிமலையில் கைது செய்யப்பட்டவர்கள் சற்றுமுன்னர் விடுதலை

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோயிலில் சிவராத்திரி வழிபாட்டின் போது கைது செய்யப்பட்டிருந்த பூசகர் உள்ளிட்ட 8 தமிழ்ர்களும் விடுதலை செய்யப்பட்டள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் சற்று முன்னர் சபையில் தெரிவித்தார்.

தெல்லிப்பழை துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேகம்

யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 25 ஆம் திகதி பங்குனி உத்தர நன்னாளில் இடம்பெறவுள்ளது.எதிர்வரும் 20 ஆம் திகதி காலை கும்பாவிஷேகத்திற்கான கிரியைகள் ஆரம்பமாகவுள்ளதுடன் 21ஆம் திகதி நண்பகல் 12 மணி முதல் 24 ஆம் திகதி மாலை 2.00 மணி வரை அடியார்கள் எண்ணெய்க்காப்பு சாத்த முடியும். மேலும், பங்குனித்திங்கள் 12ம் நாள் 25.03.2014ம் திகதி திங்கட்கிழமை சபரிவாசமேத துர்க்காதேவிக்கு பெரும் சாந்தி விழா நடைபெறவுள்ளது.

அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ். பல்கலைக்கு விஜயம்

அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் தேசிய பாதுகாப்புக் கல்லூரி, அவுஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வாணிபத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று அண்மையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டது.

யாழ். பல்கலைக்கழக முன்றலில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முன்றலில் இன்று (19) செவ்வாய்க்கிழமை மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது.தமிழர் தாயகத்தில் தொல்லியல் என்ற போர்வையிலான பண்பாட்டு அழிப்பையும் சிங்கள – பௌத்தமயமாக்கலையும் உடன் நிறுத்துமாறு கோரியும், வெடுக்குநாறிமலை ஆலயத்தில் நெடுங்கேணிப் பொலிஸாரால் திட்டமிட்டுக் கைது செய்யப்பட்டவர்களை உடன் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் சுற்றிவளைக்கப்பட்ட விலைமாதர் விடுதி

யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக இயங்கி வந்த விலைமாதர் விடுதியொன்று செவ்வாய்க்கிழமை (18) பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இதன்போது வீட்டில் தங்கியிருந்த 2 யுவதிகள், 3 ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வெடுக்குநாறிமலை விவகாரம்- விரைவில் சமர்ப்பிக்கப்படும் அறிக்கை

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய்வதற்கு ஏற்கனவே 2 அதிகாரிகள் வவுனியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும், இவ்விவகாரம் தொடர்பில் வவுனியா பிராந்திய அலுவலக ஒருங்கிணைப்பாளரின் அறிக்கை நாளை மறுதினம் கிடைக்கப்பெறும் எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.