நாடாளுமன்றம் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையீனம்: ஆய்வில் தகவல்

OruvanOruvan

Parliment of Srilanka

இலங்கை தீவில் நாடாளுமன்றம் தொடர்பான பொதுமக்களின் நம்பிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவில் வீழ்ச்சியடைந்து வருவதாக கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் அண்மையில் நடத்திய கருத்துக் கணிப்பில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

ஆய்வில் வௌியான தகவல்களின் பிரகாரம் பொதுமக்கள் மத்தியில் நாடாளுமன்றம் தொடர்பான நம்பிக்கை தற்போதைக்கு 22% வீதம் அளவில் வீழ்ச்சியுற்றுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டளவில் இதன் வீதம் 63% வீதமாக காணப்பட்டிருந்தது.

நாடு தழுவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 1350 பேரளவானோர் இந்த ஆய்வுக்காக பயன்படுத்தப்பட்டிருந்தனர்.

ஆனாலும் நீதித்துறை தொடர்பான மக்களின் நம்பிக்கை தொடர்ந்தும் அதிகரித்துக் கொண்டே இருப்பதாகவும் குறித்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.