நாடாளுமன்றத் தேர்தல் முறையில் மாற்றம்: அரசாங்கம் அறிவிப்பு - சட்டத்தை வரைய அனுமதி

OruvanOruvan

நாடாளுமன்றத் தேர்தல் முறையில் சீர்த்திருத்தங்களை கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

2023ஆம் ஆண்டின் 03ஆம் இலக்க தேர்தல் செலவீனங்களை ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கும், ஜனநாயக ரீதியான தேர்தலுக்கு தற்போது காணப்படுகின்ற தேர்தல் முறையை மாற்றியமைக்கும் தேவையும் அரசாங்கத்தால் கண்டறியப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளுடன் கலந்துரையாடல் நடத்தி அவற்றின் விதந்துரைகளுடன் கூடிய அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்கு உபக் குழுவொன்று அமைச்சரவையில் நியமிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் 160 உறுப்பினர்களை தொகுதிவாரியாகவும் 65 உறுப்பினர்களை விகிதாசார ரீதியாகவும் தேர்ந்தெடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் தினேஸ் குணவர்தன தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் விதந்துரைகளும் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தையும் கொண்டு சட்டவரைஞர்களுக்கு சட்டத்தை வரைய ஆலோனைகளை வழங்க நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச சமர்ப்பித்த யோசனைக்கு நேற்று திங்கட்கிழமை அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.