சுங்க அதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தம்: இலங்கையின் முக்கிய செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

Short Story - Local News

சுங்க அதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தம்

சுங்க அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக இடை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவுடன் இன்று (19) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

பதுளையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில்

பதுளை பிரதேசத்தில் உள்ள இரண்டு பாடசாலைகளின் ஆசிரியர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக ஒருவர் மற்றொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் காயமடைந்த 47 வயதுடைய ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 50 வயதுடைய மற்றைய ஆசிரியர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் மார்ச் மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தொழிநுட்ப கோளாறு காரணமாக விமானம் தரையிறக்கம்

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் தொழிநுட்ப கோளாறு காரணமாக மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் பெங்களூருக்கு இன்று காலை (19) பயணித்த விமானம் ஒன்றே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது.

பாதாள உலகக் குழுக்களுக்கு முடிவுகட்ட 20 விசேட பொலிஸ் குழுக்கள்

பாதாள உலகக் குழுக்களை ஒடுக்குவதற்காக விசேட பயிற்சியளிக்கப்பட்ட 20 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன என்று பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்தார். பாதாள உலகக் குழுக்களை இம்மாத இறுதிக்குள் கட்டுப்படுத்தாவிட்டால், அடுத்த மாத இறுதிக்குள் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களை முற்றாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நேர அட்டவணை 2023 (2024) பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

OruvanOruvan

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் மற்றுமொரு நாள்

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்கு மற்றுமொரு திகதியை வழங்குவதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு தீர்மானித்துள்ளது.இதன்படி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது.

கொழும்புத் துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்கள்

கொழும்புத் துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்கள் காரணமாக இறக்குமதி வர்த்தகர்கள் பெரும் நெருக்கடியொன்றை எதிர்க்கொண்டுள்ளனர்.சுங்கத்துறை அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய சுமார் ஏழாயிரம் கொள்கலன்கள் கொழும்புத் துறைமுகத்தில் தேங்கியுள்ளன.

பொதுத் தேர்தல் முறையில் மாற்றம்- அமைச்சரவை அங்கீகாரம்

பொதுத் தேர்தல் முறையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தற்போதைய விகிதாசார தேர்தல் முறையில் மாற்றங்களை ஏற்படுத்தி, கலப்பு முறையில் தேர்தலை நடத்துவது இதன் நோக்கமாகும்.பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையிலான அமைச்சரவை உபகுழு சமர்ப்பித்த அறிக்கையை மையமாகக் கொண்டு, நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ தேர்தல் முறை மாற்றம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போது அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் - அனுரகுமார சந்திப்பு

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு தேசிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.இலங்கையில் தொடர்ந்தும் முதலீடு செய்வதற்கு ஜப்பானின் முயற்சிகள் தொடர்பில் ஜப்பானிய பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

வறிய குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ள 10 கிலோ அரிசி!

குறைந்த வருமானம் கொண்ட 2.74 மில்லியன் குடும்பங்களுக்கு இரண்டு மாதங்களுக்கு 10 கிலோகிராம் நாட்டரிசியை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

OruvanOruvan

வெடுக்குநாறி சிவன் ஆலய வழக்கு தள்ளுபடி-கைது செய்யப்பட்டோர் விடுதலை

வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட எட்டு பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மேலும் இது தொடர்பான வழக்கு விசாரணை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சீருடைகள், பாடப்புத்தகங்கள் கிடைக்காவிடின் தொடர்புகொள்ள வேண்டிய எண்

2024ஆம் ஆண்டுக்கான பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் கிடைக்கப்பெறாத பாடசாலைகள் பின்வரும் தொலைபேசி/தொலைநகல்/ மின்னஞ்சலுக்கு அறிவிக்குமாறு கல்வி அமைப்பு அறிவித்துள்ளது.

பாட புத்தகங்களுக்கு

தொலைபேசி எண்கள் - 0112784815 / 0112785306

தொலைநகல் - 0112784815

மின்னஞ்சல் முகவரி - epddistribution2024@gmail.com

சீருடைக்கு

தொலைபேசி இலக்கம் - 0112785573

தொலைநகல் - 0112785573

மின்னஞ்சல் முகவரி - schoolsupplymoe@gmail.com

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் இருந்து தினமும் ஆவியாகும் 6.5 மில்லியன் லீட்டர் நீர்

கடும் வெப்பநிலையான காலநிலையால் விக்டோரியா நீர்த்தேக்கத்தில் இருந்து தினமும் 6.5 மில்லியன் லீட்டர் நீர் ஆவியாகிக் கொண்டிருப்பதாக நீர்த்தேக்கத்துக்குப் பொறுப்பான பொறியியலாளர் வசந்த எஹலபிடிய தெரிவித்துள்ளார்.

கோட்டாபயவின் முன்னாள் உடற்பயிற்சி ஆலோசகர் போதைப் பொருளுடன் கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் முன்னாள் உடற்பயிற்சி ஆலோசகர், கண்டி-யஹலத்தென்னை, நெல்லிகல பிரதேசத்தில் போதைப் பொருள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் பொலிசார் திடீர் சோதனையொன்றை மேற்கொண்டு அவரைக் கைது செய்துள்ளனர்.

மேல்மாகாண சுகாதார பணியாளர்கள் வருடாந்த இடமாற்றம் தற்காலிகமாக நிறுத்தம்

மேல் மாகாணத்தில் பணியாற்றும் சுகாதார ஊழியர்களின் வருடாந்த இடமாற்றங்கள் தற்காலிகமாக
அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வேண்டுகோளுக்கு இணங்க நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மேல் மாகாண ஆளுநர் எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்க அதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓகஸ்ட் மாதத்திற்கு முன்னர் 162 பாலங்களின் நிர்மாணப் பணிகள் நிறைவு

நாடாளாவிய ரீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 162 பாலங்களின் பணிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்கு முன்னர் பூர்த்தி செய்யப்பட்டு பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர மேற்கண்ட தகவலைத் தெரிவித்துள்ளார்.

Miss Face of Humanity 2024- மெக்சிக்கோ பறந்த மேரி ஒண்டாட்ஜே

மெக்சிகோவில் மார்ச் 12 முதல் 23 வரை நடைபெறும் Miss Face of Humanity 2024 போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கையை பிரதிநிதித்துவப்டுத்தி Anna-Marie Ondaatje (அன்னா-மேரி ஒண்டாட்ஜே) பங்கேற்கவுள்ளார்.

OruvanOruvan

கண்டியில் ஆபத்தான மீன் இனம் கண்டுப்பிடிப்பு

கண்டி - தெப்பக்குளத்தில் சுமார் 9 அடி நீளமும் சுமார் 150 கிலோ எடையும் கொண்ட "அலிகேட்டர் கார்" எனப்படும் மாமிச உண்ணி மீன்கள் பரவி வருவதால் குளத்தை சுற்றியுள்ள சுற்றுச்சூழல் பல்லுயிர் பெருக்கத்திற்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கண்டி குளத்தின் மஹாமாயா பெண்கள் ஆரம்பப் பள்ளி வரை பல இடங்களில் இந்த மீன் காணப்பட்டுள்ளதாக பலர் அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

OruvanOruvan

விவசாயிகளைப் பாராட்டிய ஜனாதிபதி

கடந்த பெரும்போகத்தில் முன்மாதிரியாகச் செயற்பட்ட விவசாயிகள் இருவரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். அநுராதபுரம், திரப்பனை, புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த இளம் விவசாயி பந்துல முனசிங்க, அரை ஏக்கர் மிளகாய் பயிரிட்டு 12 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டியிருந்ததுடன், கல்குளம பிரதேசத்தைச் சேர்ந்த இளம் விவசாயி புத்திக சுதர்சன, ஒரு ஏக்கர் தர்பூசணி பயிரிட்டதன் மூலம் இரண்டு மாதங்களில் 4 மில்லியன் ரூபா வருமானம் பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

OruvanOruvan

இரட்டைக்குடியுரிமையை இழக்க மாட்டேன் - பசில்

எந்தக் கட்டத்திலும் இரட்டைக் குடியுரிமையை இழக்கத் தான் தயாராக இல்லை என்று பசில் ராஜபக்‌ஷ தனியார் தொலைக்காட்சியின் அரசியல் நிகழ்ச்சியொன்றில் வலியுறுத்தியுள்ளார். கோட்டா ஆட்சியின் போது 20வது திருத்தச் சட்டம் ஊடாக இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் இலங்கையில் நாடாளுமன்றத்திற்குத் தெரிவாக இருந்த தடை நீக்கப்பட்டது என்றும் எதிர்வரும் காலத்திலும் எந்தப் பதவி கிடைப்பதாக இருந்தாலும் எனது இரட்டைக் குடியுரிமையை அதற்காக நீக்கிக் கொள்ள மாட்டேன் என்றும் பசில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடத்தப்படும்! அமைச்சரவையில் ஜனாதிபதி உறுதி

ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடத்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசி்ஙக அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மத்தளையில் இருந்து கொட்டாவ நோக்கி பயணித்த வேன்னொன்று அதே திசையில் பயணித்த கொள்கலன் வாகனத்தின் பின்பகுதியில் மோதியதில் இன்று (19) அதிகாலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. வேனில் பயணித்த இருவர் காயமடைந்தநிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தநபர் காலி, நாகொட பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எல்நினோ தாக்கம்-எச்சரிக்கும் வைத்தியர்கள்

அதிக வெப்பக் காலநிலையில் சிறு மாற்றம் ஏற்பட்டு, மழை பெய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படக் கூடும் என்று வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.எதிர்வரும் 21 ஆம் திகதி தொடக்கம் 24 ஆம் திகதி தற்போதுள்ள அதிகளவான வெப்பக் காலநிலை சற்று தணியக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் தற்போதைக்கு நிலவும் அதிக வெப்ப நிலையானது காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கமாகும் என்றும் வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம்

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.இன்றும் (19), நாளையும் (20) குறித்த விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.அதன் பின்னர் வியாழக்கிழமை (20) விவாதத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

காஸா நிதியத்துக்கு ஆறுமில்லியன் நிதி சேகரிப்பு

காஸா சிறுவர்களுக்கான "காஸா நிதியத்துக்கு" 57, 73, 512 ரூபா வரையான நிதி திரட்டப்பட்டுள்ளது.அரசாங்கத்தின் அனைத்து அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்கள் இந்த வருட இப்தார் நிகழ்வுக்காக ஒதுக்கியுள்ள நிதியை குறித்த காசா நிதியத்துக்கு அன்பளிப்புச் செய்யுமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்திருந்தார்.பொதுமக்களும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 11ஆம் திகதிக்கு முன்னதாக இலங்கை வங்கியின் தப்ரபேன் கிளையில் 7040016 கணக்கு இலக்கத்துக்கு தங்கள் அன்பளிப்புகளை வழங்க முடியும்.

பசில் தரப்பில் இருந்து இன்னும் இருவர் ரணிலுடன் ஐக்கியம்

பொதுஜன பெரமுண கட்சியின் மேலும் இரண்டு முக்கியஸ்தர்கள், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவான அணியில் இணைந்து கொண்டுள்ளனர்.மொட்டுக் கட்சியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தாரக பாலசூரிய, இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர ஆகியோரே இவ்வாறு புதிதாக ரணில் அணியில் இணைந்து கொண்டுள்ளனர்.

ரணிலுடன்,பிள்ளையான் ஹெலிகொப்டர் பயணம்

ஜனாதிபதி ரணிலுடன் , ராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மேற்கொண்ட ஹெலிகொப்டர் பயணம் தற்போது பேசுபொருளாகி உள்ளது.மேலும் ரணில் விக்கிரமசிங்க குறித்து பிள்ளையான் எழுதியுள்ள புத்தகம் ஒன்றும் எதிர்வரும் 23 ஆம் திகதி வெளியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.