இலங்கை கடற்றொழிலாளர்கள் எச்சரிக்கை: இலங்கையின் முக்கிய செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

Short Story - Local News

இலங்கையின் கடற்றொழிலாளர்கள் எதிர்வரும் நாட்களில் தொழிலுக்காக அரபிக்கடலுக்குச் செல்ல வேண்டாம் என கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சனிக்கிழமை அரபிக்கடலில் ஈரானிய கடற்றொழில் படகை ஆயுதமேந்திய சோமாலிய குழு கடத்திய சம்பவத்தையடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொரட்டுவயில் பெண் படுகொலை

மொரட்டுவை, இந்திபெத்த பெக்வத்த பகுதியில் பெண்ணொருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.50 வயது மதிக்கத்தக்க பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.கொலையை செய்த நபர் மொரட்டுமுல்ல பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் குமார வெல்கம

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கத் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

தமக்கு கட்சி இருப்பதாகவும், தாம் சிறந்த தலைவராகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை தமது ஜாதக நிலையும் நல்லதாகவே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி புடின் போல் தனக்கும் அதிஷ்டம் தென்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு தற்போது பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீண்டுவரும் நிலையில் மக்களின் வாழ்கை ஓர் அளவில் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. அந்தவகையில் அடுத்த மாதம் முதல் பெறுமதி சேர் வரியை 15 சதவீதமாக கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மட்டு. போதனா வைத்தியசாலையில் கதிர்வீச்சு இயந்திரம் பழுது

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை புற்று நோய் பிரிவில் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு சென்ற நோயாளர்கள் கதிர்வீச்சு இயந்திரம் பழுதடைந்ததனால் சிகிச்சை பெறமுடியாத நிலையை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலைமைக்கு வைத்தியசாலையின் அசமந்த போக்கே காரணம் என குற்றச்சாட்டு தெரிவித்து இன்று திங்கட்கிழமை (18) காலை வைத்தியசாலை கதிர்வீச்சு பிரிவுக்கு முன்னால் ஏராளமான நோயாளிகள் ஒன்று திரண்டு எதிர்ப்பு நடவடிக்கையொன்றை மேற்கொண்டனர்.

மின்சார வாகன இறக்குமதி மூலம் அரசாங்க வரி வருமானம் அதிகரிப்பு

மின்சார வாகன இறக்குமதி மூலம் அரசாங்கத்தின் வரி வருமானம் கணிசமான அளவில் அதிகரித்துள்ளது கடந்த வருடம் (2023) முதல் ஒன்பது மாதங்களில் வரி வருமானம் 21.5 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக பொது நிதி முகாமைத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவர் மர்ம மரணம்

யாழ்ப்பாணம், சுழிபுரம் பகுதியில் குடும்பப் பெண்ணொருவர் மர்மமான நிலையில் உயிரிழந்துள்ளார். பெண்ணின் உயிரிழப்புக்கு அவரது கணவரே காரணமாக இருக்கலாம் என சந்தேகம் நிலவுகின்றது. தொல்புரம் கிழக்கு, சிவபூமி வீதியில் இன்று மதியம் குறித்த சம்பவம் நடந்தது. 49 வயதான இராசேந்திரம் செல்வநிதி என்பவரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

மஹிந்தவின் நிகழ்வில் கலந்து கொண்ட செந்தில் தொண்டமான்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கலந்து கொண்ட கிழக்கு மாகாண நிகழ்வொன்றில் கிழக்கு ஆளுனர் செந்தில் தொண்டமானும் கலந்து கொண்டுள்ளார். மல்வத்து மகாவிஹார பிரதி நாயக்க தேரராக , யக்கல விக்கிரமாராச்சி ஆயுர்வேத பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சங்கைக்குரிய நியங்கொட தர்மகீர்த்தி ஸ்ரீ சங்கரக்கித விஜிதஸ்ரீ தேரர் நியமிக்கப்பட்டுள்ளமையை கௌரவிக்கும் நிகழ்விலேயே இருவரும் கலந்தகொண்டுள்ளனர்.

OruvanOruvan

இலங்கை மின்சார சபையினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய திட்டம்!

சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், குடியிருப்புகளுக்கு விசேட மின்சார இணைப்புத் திட்டமொன்றை இலங்கை மின்சார சபை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, புதிய மின்சார இணைப்புக்கான முழுத் தொகையில் 25 சதவீதத்தை முற்பணமாக செலுத்துவதுடன் மீதியை தவணைகளில் செலுத்த வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மொரட்டுவை பகுதியில் பெண்ணொருவர் கழுத்தறுத்து கொலை!

மொரட்டுவை, இந்திபெத்த பெக்வத்த பகுதியில் 50 வயதுடைய பெண்ணொருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையை செய்த நபர் மொரட்டுமுல்ல பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையின்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 300 ரூபா 05 சதமாக பதிவாகியுள்ளதுடன் விற்பனை விலை 309 ரூபா 67 சதமாக பதிவாகியுள்ளது.

OruvanOruvan

இரத்தினபுரி மாவட்டத்தில் பதிவான அதிகூடிய வெப்பநிலை

இரத்தினபுரி மாவட்டத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 36.3 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.அனுராதபுரத்தில் 35.5 பாகை செல்சியஸாகவும், கொழும்பில் 33.03 பாகை செல்சியஸாகவும் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

சுகாதார தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தம்

நாளை முன்னெடுக்கவிருந்த பணிபகிஷ்கரிப்பை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. சுகாதார அமைச்சின் எழுத்துமூல கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் அறிவித்துள்ளார்.

உணவு ஒவ்வாமை காரணமாக மூவர் வைத்தியசாலையில்

பதுளை - மீகஹகிவுல பகுதியில் உணவு ஒவ்வாமை காரணமாக மூன்று பேர் வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளனர். 14,34,28 வயதுடைய மூவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உலர்ந்த சோறு, தேங்காய், சீனி ஆகியவற்றில் தயாரிக்கப்பட்ட உணவை உட்கொண்ட நிலையில், ஏற்பட்ட வாந்தியையடுத்தே குறித்த மூவரும் வைத்தியவாலையில் அனுமதிக்கப்பட்டள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கைகளில் 1,073 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்போது ஹெரோயின் உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோப் குழுவின் உறுப்புரிமையில் இருந்து விலகும் இரான் விக்ரமரத்ன

கோப் குழுவின் உறுப்புரிமையிலிருந்து விலகவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை அறிவித்துள்ளார். இதற்கான கடிதத்தை சபாநாயகரிடம் கையளித்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் புடின் நான்தான் - குமார வெல்கம

நாட்டின் ஜனாதிபதியாக வருவதற்கான அனைத்து தகுதிகளையும் தான் பூர்த்தி செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.இன்னும் சில நாட்களில் தன்னுடைய ஜாதகம் நன்றாக இருக்கும்.ரஷ்யாவில் புட்டினைப் போன்று தனக்கு கீழும் ஒரு நட்சத்திரம் உதயமாகியுள்ளது என ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது குமார வெல்கம இவ்வாறு தெரிவித்தார்.

மீண்டும் உலாவரும் முகக் கவச கலாசாரம்

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக சுவாசக்கோளாறுகளிலிருந்து பாதுகாக்க கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் துஷாந்த மத்கெதர தெரிவித்துள்ளார். கடும் வெப்பம் காரணமாக ஏற்பட்டுள்ள தூசியின் அதிகரிப்பு சுவாச பிரச்சினைகளை ஏற்படுத்தும்.எனவே பாதிப்பை குறைக்க கட்டாயம் முகக்கவசத்தை அணிய பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியால் இலங்கைக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி

ஆசிய அபிவிருத்தி வங்கியானது இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அதிக நிதியுதவியை வழங்குவதற்கும் பொருளாதார நெருக்கடி மற்றும் காலநிலை மாற்றம் போன்றவற்றை எதிர்கொள்வதற்கு உதவும் வகையிலும் 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்குவதற்கு முன்வந்துள்ளது.

கைதான தமிழக மீனவர்கள் விளக்கமறியலில்

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து , நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்தொழிலில் ஈடுபட்ட நிலையில் கைதான 21 தமிழக கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தை வந்ததைடந்த எம்பியன்ஸ் சொகுசு கப்பல்

எம்பியன்ஸ் சொகுசு ரக கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்த கப்பல் தாய்லாந்தின் ஃபூகெட்டில் இருந்து 1,131 பயணிகள் மற்றும் 565 பணியாளர்களுடன் இலங்கையை வந்தடைந்துள்ளது. அவுஸ்திரேலியா, கனடா, பிரித்தானியா மற்றும் ஜேர்மன் நாட்டு பயணிகள் கப்பலில் வருகைத்தந்துள்ளனர்.

உக்ரெய்ன் இராணுவத்தில் வேலைவாய்ப்பு-ஆட்கத்தலில் ஈடுப்பட்ட இலங்கை தம்பதியினர் கைது

உக்ரைன் இராணுவ படையில் உறுப்பினர்களை இணைப்பதற்காக ஆட்கடத்தல் நடவடிக்கையில் ஈடுப்பட்ட தம்பதிகளை பொலிஸார் கைது செய்துள்ளனனர். கடவத்தை பிரதேசத்தில் வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்றை நடத்திவந்த கண்வன் மனைவியே இவ்வாறு கைத செய்யப்பட்டுள்ளனர். ஒய்வுபெற்ற இராணுவத்தினர் உட்பட 45 இராணுவ வீரர்களை தற்போது வரையில் உக்ரைன் நாட்டுக்கு அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.

நீர் விநியோகத் தடை தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு

நீர் விநியோகத் தடை மற்றும் குறைந்த அழுத்தத்துடனான நீர் வழங்கல் தொடர்பாக முறைப்பாடுகள் 30 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் அனோஜா களுவாராச்சி தெரிவித்துள்ளார். நீர் தேவை அதிகரித்துள்ளமையால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாலகேவத்தை பிரதேசத்தில் அதிகளவிலான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

ஹங்வெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலகேவத்தை பிரதேசத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில், ஒரு கிலோ 03 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள், மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 3 கையடக்கத் தொலைபேசிகளுடன் 42 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபரிடம் 5 வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் 4 கடனட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தென் மாகாணத்தில் இன்று முதல் விசேட சுற்றிவளைப்பு

தென் மாகாணத்தை மையமாகக் கொண்டு இன்று (18) திங்கட்கிழமை முதல் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. அதிகபட்ச பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்தி சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். தென் மாகாணத்தில் திட்டமிட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த விசேட சுற்றிவளைப்பு இடம்பெறவுள்ளது.

இலங்கையை வந்தடைந்துள்ள உலகின் முதலாவது இயற்கை திரவ எரிவாயு கப்பல்

இயற்கை திரவ எரிவாயு மூலம் இயக்கப்படும் உலகின் முதல் போக்குவரத்து கப்பலானது ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. NYK கப்பல் சேவைக்குச் சொந்தமான இந்தக் கப்பல் இந்தமாத முதல் வாரத்தில் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளது.

வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் சாத்தியம்

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை இன்று (18) மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனியுடனான வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.