தமிழர் தேசத்தை அழைப்பது எப்படி?: விளக்குகிறார் அருண்தம்பி முத்து

OruvanOruvan

Tamil nation

சிங்கள தேசியம் தமிழர்களை சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் ஒரு குறுந்தேசிய இனமாக மாற்றுவதே திட்டம். அதனடிப்படையிலேயே தமிழர்களின் பிரச்சினைகளை பந்தாடி வருகின்றனர்.

எமது அடையாளத்தை உறுதிப்படுத்த தமிழ் தேசத்தை “தமிழீழம்“ என்று அடையாளப்படுத்தி எம் இலக்கை அடையவேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் தலைவர் அருண் தம்பிமுத்து தெரிவித்தார்.

“நாங்கள் முக்கியமான காலகட்டத்தில் இருக்கின்றோம். தமிழர்களாகிய எங்களுக்கு அரசியல் தீர்வு இதுவரை கிடைக்கப்பெறவில்லை. தமிழீழத்தில் தமிழர்களின் குடிபரம்பல் வீழ்சியடைந்துள்ளது.

ஈழதேசத்தின் பூர்வீக குடிகள் தமிழர்கள் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. ஆனால் தமிழர் தாயகத்தில் குறுகிய இனமான எம்மை அடையாளப்படுத்த சிங்கள பேரினவாதிகள் முற்படுகின்றனர்.

தாயத்திற்கு எப்படிபட்ட தீர்வு வரவேண்டும் என்ற கேள்வியை அனைத்து தலைவர்களும் பேசமுடியும். ஆனால் தேசம் தேசியம் சுயநிர்ணயம் என்பதை தமிழர்கள் விட்டுக்கொடுக்க முடியாது. எனவே தமிழீழம் என்ற வார்த்தைக்கு 6 ஆம் திருத்த சட்டத்தில் எந்த தடையும் விதிக்கவில்லை. எனவே தமிழர்கள் எமது தாயகம் தமிழீழம் என பாவிக்கவேண்டும்.

தனிநபர்களுக்குள் உள்ள அரசியல் கொள்கை அல்லது தனிப்பட்ட கருத்து முரண்பாடுகளுக்காக தமிழினத்தின் எதிர்காலத்தை விலைக்கு விற்கமுடியாது.

எம் அடையாளத்தை நாம்தான் உறுதிப்படுத்தவேண்டும். எனவே தமிழ் தேசியத்தின் பற்றாளர்களான நாமே தமிழீழம் என்ற வார்த்தை பாவனையை ஆரம்பிப்போம்” என தெரிவித்தார்.