குஜராத் பல்கலைக்கழக விடுதியில் தாக்குதல் - இலங்கை மாணவன் உள்ளிட்ட ஐவருக்கு காயம்: முஸ்லிம் மாணவர்கள் இலக்குவைக்கப்பட்டதாக தகவல்

OruvanOruvan

Sri Lanka student attacked in India university hostel

இந்தியாவின் மேற்கு குஜராத் மாநிலத்திலுள்ள பல்கலைக்கழக விடுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இலங்கை மாணவர் உள்ளிட்ட ஐந்து பேர் கடும் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை, ஆப்கானிஸ்தான், துருக்மெனிஸ்தான் மற்றும் ஆபிரிக்க நாடுகளை சேர்ந்த மாணவர்களே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

புனித ரமழான் நோன்பு காலத்தில் தொழுகையில் ஈடுபட்டதன் காரணமாக தீவிர வலதுசாரி குழுவினால் இந்த மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக விசாரணை இடம்பெற்று வரும் நிலையில், சம்பவம் தொடர்பில் இருவர் குஜராத் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்படும் என இந்திய வெளியுறவு அமைச்சு உறுதியளித்துள்ளது.

நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தில் முதல்வராக இருந்தபோது முஸ்லிம் மக்கள் மீது மிக மோசமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

2002 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுமார் 3000 இற்கும் அதிகமான முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டனர்.

முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை பரப்பிய இந்துத்துவ கொள்கையோடு நரேந்திர மோடி 2014 ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக பதவியேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.