மக்கள் ஆணை செயலிழந்துவிட்டது: அனைத்துத் தேர்தல்களும் விரைவில் நடைபெற வேண்டும்

OruvanOruvan

”2025ஆம் ஆண்டுக்குள் பிற்போடப்பட்டுள்ள மற்றும் நடைபெற வேண்டிய அனைத்துத் தேர்தல்களும் நடத்தப்பட்டிருக்க வேண்டும். இதற்காக அனைவரும் குரல்கொடுக்க வேண்டும்.”

இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

அவர் மேலும் வலியுறுத்தியதாவது,

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பிற்போடப்பட்டு ஒருவருடம் கடந்துள்ளது. அதுபற்றி எவரும் பேசுவதில்லை. சிறிய விடயத்தை செய்யாவிட்டால் அடுத்தடுத்த விடயங்களையும் செய்யாமலிருக்க முடியும்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இதுபற்றி தேடுவதில்லை. நீதிமன்றங்களின் தீர்ப்பு வரும்வரை காத்திருக்கின்றனர். கருத்துக் கணிப்புகளை நடத்து ஒருசில அமைப்புகளை தவிர எவரும் இந்த விடயங்கள் பற்றி ஆய்வு செய்தில்லை.

தேர்தல் எப்போது நடைபெறும் என்பதல்ல எமது கேள்வி. உள்ளூராட்சிமன்றத் தேர்தல் எப்போது நடைபெறும் என்பதே எமது கேள்வி.

மக்கள் ஆணை செயலிழந்துவிட்டது

ஜனாதிபதித் தேர்தலை பிற்போட முடியாது. செப்டெம்பர் 17ஆம் மற்றும் ஒக்டோபர் 17ஆம் திகதிகளுக்கு இடையில் ஜனாதிபதித் தேர்தல் கட்டாயம் நடத்தப்பட வேண்டும்.

என்றாலும், அதற்கு முன்னர் தேர்தல்கள் பிற்போடப்படுவதற்கு எதிராக நாம் அழுத்தம் கொடுக்க வேண்டும். ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் இரண்டு தேர்தல்களை நடத்த முடியும் அமைச்சரவைக் கூறியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலை நடத்த எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிதியை ஒதுக்கீடு செய்ய முடியும். அதனால் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் ஜனாதிபதி மற்றும் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களை நடத்த முடியும்.

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்சவை தெரிவுசெய்யவும் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தை அமைக்கவுமே 2020 மக்கள் ஆணை கிடைத்தது. அதற்போது அவர்கள் இருவரும் இல்லை. அவர்களது ஆட்சியும் இல்லை. மக்கள் ஆணை செயலிழந்துவிட்டது.

ஆளுங்கட்சிக்கு சென்றதும் இவற்றை மறக்கின்றனர்

அதனால் நாடாளுமன்றத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் மற்றும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலையும் நடத்த வேண்டும். சந்தர்ப்பம் இருந்தால் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு மாகாண சபைத் தேர்தலையும் நடத்த வேண்டும்.

2025ஆம் ஆண்டுகளுக்கு இந்த அனைத்துத் தேர்தல்களும் நடைபெற வேண்டும். மாகாண சபைத் தேர்தலை நடத்தம் தாமதமாகுவதாக கூறி தேர்தல்கள் ஆணைக்குழுவை தற்போது ஆளுங்கட்சியில் இருப்பவர்கள் எதிர்க்கட்சியில் இருக்கும் போது சுற்றிவளைத்தனர்.

நீதிமன்றங்களில் வழக்குகளையும் தொடுத்தனர். ஆனால், எதிர்க்கட்சியில் இருந்து ஆளுங்கட்சிக்கு சென்றதும் இவற்றை மறக்கின்றனர். இதுதான் எவ்வாறென தெரியவில்லை.” என்றார்.