ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவு: ஹர்ஷ டி சில்வா தலைமையிலான குழுவொன்று ஆளும்கட்சியுடன் இணையவுள்ளதாக தகவல்

OruvanOruvan

Samagi Jana Balawegaya

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையிலான அணியொன்று கட்சியை விட்டு விலகிக் கொள்ளும் தீர்மானத்தில் இருப்பதாக தெரியவருகிறது.

ஹர்ஷ டி சில்வா, ராஜித சேனாரத்ன, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ரோஹினி கவிரத்ன, தலதா அதுகோரல உள்ளிட்டவர்களே இவ்வாறு கட்சியை விட்டு விலகி தனித்துச் செயற்படுவது தொடர்பில் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பெரும்பாலும் எதிர்வரும் சில வாரங்களுக்குள் இந்த மாற்றம் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி, குறித்த ஐவரும் அல்லது மேலும் சிலரை இணைத்துகொண்டு ஆளுங்கட்சியில் இணைந்துகொள்ளத் தீர்மானித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

இந்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்திக்குள் ஏற்படும் பிளவைத் தடுப்பதற்காக சஜித் தரப்பில் இதுவரை எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.