நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் ரணிலின் நிபந்தனை: தொடரும் கலந்துரையாடல்கள்

OruvanOruvan

Ranil Wickramasinghe

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டுமானால் 113 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க நிபந்தனையொன்றை முன்வைத்துள்ளதாக உள்ளக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.

எனினும், பொதுத் தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்த ஆட்சியாளர்களின் கவனம் திரும்பியுள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பிலான பல கலந்துரையாடல்களில் அதிக முன்னுரிமை ஜனாதிபதித் தேர்தலுக்கே கிடைக்கப்பட்டுள்ளது.

தற்சமயத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கு முகம் கொடுப்பது சிறந்தது என குறித்த கலந்துரையாடல்களின் போது பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தேர்தல் பற்றி....

ஜனாதிபதி தேர்தலை முதலில் நடத்தும் நோக்கத்திலேயே ஐக்கிய தேசிய கட்சியானது தமது முதலாவது மாநாட்டை குளியாப்பிடியவில் நடத்தியது .

எவ்வாறாயினும் , இந்த ஆண்டில் முதலில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தனது தனிப்பட்ட கருத்து எனவும் கட்சியின் உத்தியோபூர்வ கருத்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் மகிந்த தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலுக்கு பின்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதில் சட்ட சிக்கல் இல்லை , முதலில் தேர்தல் நடத்துவது குறித்து தங்கள் கட்சியின் மூத்தவர்கள் மத்தியில் கருத்துகள் காணப்படுகின்றன.

எதிர்வரும் சில வாரங்களில், நடைபெறவுள்ள முதலாவது தேர்தல் தொடர்பில் அரசாங்கத் தலைவர்களுடன் கலந்துரையாடி நாட்டுக்கு அறிவிப்பேன் என மகிந்த ராஜாக்ச தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச பொதுத்தேர்தலை நடத்துவது சிறந்தது என தன்னுடைய கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல்....

தற்போதைய ஜனாதிபதியின் ஆட்சி காலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 18ஆம் திகதியுடன் நிறைவடையும் நிலையில் அதற்கு முன்னர் ஜனாதிபதியொருவரை தேர்ந்தெடுப்பது அவசியம்.

தேசிய மக்கள் சக்தியின் வெற்றி நிச்சயம் எனவும் தோல்வியடைய , பதவியை துறக்க விரும்பாதவர்கள் பல்வேறு கதைகளை கூறி ஜனாதிபதி தேர்தலை தவிர்க்க பல வழிமுறைகளை வகுத்து வருகின்றனர்.

மேலும் இது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் பல கலந்துரையாடல்களை நடத்தி அதன் பின்னர் தேர்தல் தொடர்பில் அறிவிக்கப்படும் என அரசியல் வட்டாரங்களில் பல கருத்துக்களும் நிலவி வருகின்றன.