காரீய சுரங்கத் தொழிலை குறிவைக்கும் இந்தியா: இலங்கை எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறது?

OruvanOruvan

Graphite in Sri Lanka

காரீயம் (graphite) அதன் இயற்கையான நிலையில் மின்சார வாகன (electric vehicle) பேட்டரி உற்பத்தியில் உலகளவில் பயன்படுத்தப்படுகின்றது.

இருப்பினும், இலங்கையின் காரீயம் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான குறிப்பிடத்தக்க ஆற்றலைக் கொண்டுள்ளது.

கடந்த வருடத்தில் அமேரிக்கா மாத்திரம் ஒரு மில்லியன் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்துள்ளது.

அதேநேரம், உலகளாவிய ரீதியில் மின்சார வாகன உற்பத்தி 85 மில்லியன் யுனிட்களை எட்டியுள்ளது.

2019 ஆம் ஆண்டில் 4.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் 2570 மெட்ரிக் தொன்கள் மதிப்புடைய ஏற்றுமதியுடன், உலகளாவிய சந்தைப் பங்கில் வெறும் 0.9 வீதத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், இலங்கை 11 ஆவது உலகளாவிய காரீய வழங்குநராக தரப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, 'மின்சார வாகன விநியோகச் சங்கிலிகளில் வர்த்தகப் போர்கள்: இலங்கையின் காரீய தொழில்துறைக்கு ஒரு வெற்றி' எனும் தலைப்பில் Institute of Policy Studies நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது.

அத்துடன், பங்குதாரர்கள் இலங்கையின் காரீய சுரங்கங்களின் பற்றாக்குறையை வலியுறுத்துவதுடன், அதிகரித்து வரும் தேவையை பூர்த்திசெய்வதற்கு தவறிவிட்டதாக தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், காரீயத்திற்கான உலகளாவிய தேவை அதிகரித்து வரும் நிலையில், இலங்கையில் காரீய சுரங்கங்களை அகழ்வதற்கு இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது.

முக்கிய சந்தைகளில் குறைந்த அளவு மற்றும் அதிக விலை காணப்படுகின்ற போதிலும், காரீய ஏற்றுமதியில் இலங்கையின் ஒப்பீட்டு நன்மையை இந்த அறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

அத்துடன், இலங்கை மலிவு உற்பத்தியாளர்களிடம் இருந்து போட்டியை எதிர்கொள்கிறது. அதே நேரத்தில் அமெரிக்காவின் பாரபட்சமான தொழில்துறை கொள்கைகள் இலங்கைக்கு சாதகமான நிலையை ஏற்படுத்துகின்றன.

குறிப்பிடத்தக்க வகையில், இலங்கை, மொசாம்பிக் மற்றும் மடகாஸ்கர் ஆகிய நாடுகள் சீனா அல்லாத முக்கிய காரீய விநியோகத்தர்களாக தனித்து நிற்கின்றன.

மேலும், காரீய சுரங்க தொழிற்துறையில் இலங்கைக்கான நம்பிக்கைக்குரிய வாய்ப்புகள் காணப்படுகின்றமை தெளிவாக புலப்படுகின்றது.

ஆசிய நாடுகளுடனான வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் அமெரிக்காவுடனான கனிம வர்த்தக ஒப்பந்தங்களை ஆராய்வது இலங்கையின் சுரங்கத் துறையை மேம்படுத்துவதற்கான முதலீடுகளை ஈர்ப்பதற்கு வழிவகுக்கும்.