விளக்கமறியலில் வைக்கப்பட்ட இளைஞன் உயிரிழப்பு: மரணத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை

OruvanOruvan

Young man who died in prison

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவர் சிறைச்சாலையில் உயிரிழந்துள்ளார்.

கடந்த 6 ஆம் திகதி கடுவெல பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞன், மறுநாள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்த நிலையில், குறித்த இளைஞர் கடந்த 16ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞன் சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவர் உயிரிழந்ததாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினி பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இருப்பினும், மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.