இத்தாலிக்கு சாரதி பணிக்காக செல்வோருக்கான இலங்கை சாரதி அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம்: தொழில் வாய்ப்புகள் இழக்கப்படும் ஆபத்து

OruvanOruvan

Driving licence

இலங்கையிலிருந்து இத்தாலிக்கு சாரதி பணிக்காக செல்வோருக்கு இலங்கையின் சாரதி அனுமதிப்பத்திரத்தை இத்தாலிய சாரதி அனுமதிப்பத்திரமாக மாற்றும் முறை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் இத்தாலி வாழ் இலங்கையர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 02 வருடங்களாக இந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை சாரதி அனுமதிப்பத்திரத்தை இத்தாலிய சாரதி அனுமதிப்பத்திரமாக மாற்றும் முறையின் ஊடாக அதிக தொழில் வாய்ப்புகள் காணப்படுகின்றன.

இந்நிலையில் அம்முறைமை இடைநிறுத்தப்பட்டதால் பெரும்பாலோனோர் வேலை வாய்ப்பை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்குமிடையிலான ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை சாரதி அனுமதிப்பத்திரத்தை இத்தாலிய சாரதி அனுமதிப்பத்திரமாக மாற்றுவது கேலிக்குரிய செயலாகும் எனவும் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

எவ்வாறாயினும், அந்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளதாகவும் அதன் பணிகள் முன்னதாகவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இது தொடர்பில் இருநாட்டு மோட்டார் வாகன அதிகாரிகளுக்கும் இடையேில் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.