பாடசாலை விளையாட்டு விழாக்களை நடத்துவதற்கு தற்காலிக தடை: இலங்கையின் முக்கிய செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

Short Story - local news

பாடசாலை விளையாட்டு விழாக்களை நடத்துவதற்கு தற்காலிக தடை

தற்போது நாட்டில் நிலவும் அதிக வெப்பநிலையைக் கருத்தில் கொண்டு பாடசாலை விளையாட்டு விழாக்களை நடத்துவதை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். மேலும் சிங்கள மற்றும் இந்து புத்தாண்டின் பின்னர் விளையாட்டு விழாக்களை நடத்துமாறு உரிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்

அம்பலாங்கொடையில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் பணி இடைநிறுத்தம்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.கடமை தவறிய குற்றச்சாட்டின் கீழ் இவர்கள் இருவரும் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பெண்கள் பாதுகாப்பு : தெற்காசியாவில் இலங்கைக்கு முதலிடம்

பெண்களின் அமைதி மற்றும் பாதுகாப்பு தொடர்பில் தெற்காசியாவில் முதலிடத்தை இலங்கை பதித்துள்ளது.

அதன்படி, உலகளாவிய ரீதியில் டென்மார்க் முதலிடத்தை பெற்றுள்ளது.

மாத்தறையில் கூரிய ஆயுதத்தால் தாக்குதலுக்குள்ளான நபர் பலி

மாத்தறை மாவட்டத்தின் வெலிகம உயன்கந்த பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்குதலுக்குள்ளான நபரொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மே தின நிகழ்வுக்கு தீவிரமாக தயாராகும் ஐ.தே.க

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கொண்டாட்டத்தை கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்திற்கு அருகாமையில் நடாத்தி அதிகளவான மக்கள் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முன்னாள் நிதி அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்டத் தலைவருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

தமிழ் பேசும் மக்களுக்காக அவசர தொலைபேசி இலக்கம்

வடக்கு,கிழக்கு உள்ளிட்ட தமிழ் பேசும் மக்களுக்காக பொலிஸ் உதவிகளைப் பெற்றுக்கொள்ள 107 என்ற அவசர தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரால் இந்த அவசர தொலைப்பேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இதன்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85.35 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதுடன் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 81.04 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

பதினெட்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழு பரிந்துரைகளுக்கு அமைய உடன் அமுலாகும் வகையில் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் 8 பேர் உட்பட 18 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபரினால் இந்த இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை நியமிக்க தீர்மானம்

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன், எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிச்சயம் வெற்றிபெறும் எனவும், ஜனாதிபதி வேட்பாளர் இன்னும் பெயரிடப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டொலரின் பெறுமதியில் தொடர் வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த மூன்று மாதங்களில் 5.6 சதவீதத்தால் வலுப்பெற்றுள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் விலை 305 ரூபா 64 சதமாகவும், அதன் கொள்வனவு விலை 300 ரூபா 60 சதமாகவும், விற்பனை விலை 310 ரூபா 20 சதமாகவும் காணப்படுகிறது.

ரயில் ஆசன முன்பதிவு முறையில் சிக்கல்

தூர பிரதேசங்களுக்கான இரயில் சேவையில் ஆசனங்களை முன்பதிவு செய்வதற்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிகழ்நிலை (Online) முறைமை சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதன் காரணமாக கோட்டை இரயில் நிலையத்திற்கு வருகைதந்த பயணிகள் பலர் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளை சந்திக்க கோரிக்கை விடுக்கவில்லை

சர்வதேச நாணய நிதியத்திலிருந்து நாட்டிற்கு வருகை தரும் பிரதிநிதிகளுடனான சந்திப்புக்கு கோரிக்கை விடுத்ததாக வெளியான தகவலை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா மறுத்துள்ளார்.அமைச்சர் செஹான் சேமசிங்கவின் தகவலுக்கு பதிலளிக்கும் வகையில் ‘எக்ஸ்’ தளத்திலேயே இவ்வாறு மறுப்பு தெரிவித்து பதிலளித்துள்ளார்.

நாட்டின் சில பிரதேசங்களில் தொடரும் மழையுடனான காலநிலை

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கொழும்பு,கம்பஹா,மொனராகலை,மன்னார்,முல்லைத்தீவு, வவுனியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும்.மத்திய,சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.