கிணற்றிற்குள் விழுந்த 6 வயது சிறுமி உயிரிழப்பு: வடக்கு - கிழக்கு செய்திகள் ஒரே பார்வையில்....

OruvanOruvan

North-East News

கிணற்றிற்குள் விழுந்த 6 வயது சிறுமி உயிரிழப்பு

மதுரங்குளிய - விருதொடே பிரதேசத்தில் 6 வயது சிறுமி ஒருவர் கிணற்றிற்குள் விழுந்து உயிரிழந்துள்ளார். கிணற்றிற்குள் விழுந்து நீரில் மூழ்கிய சிறுமி மீட்கப்பட்டு, புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

களுவாஞ்சிக்குடி பொது மயானத்தில் கைக்குண்டு

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொது மயானத்தில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு ஒன்றை விசேட அதிரடிப்படையினர் தோண்டி எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனை வெடிக்கவைத்து அழிப்பதற்காக நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையினை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அநுரகுமாரவின் வடக்கு விஜயத்திற்கு வலுக்கும் எதிர்ப்புகள்

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவின் வடக்கு விஜயத்திற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் சந்திப்பிற்காக அநுரகுமார திஸாநாயக்க இன்று கிளிநொச்சி சென்றிருந்தார்.இந்நிலையில், மக்கள் சந்திப்பு இடம்பெற்ற பகுதியை அண்மித்து A9 வீதியில் இவ்வாறு பதாதைகளை கட்டிவிடப்பட்டு எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

நீரின்றி அவதிப்படும் முத்தயன்கட்டு மக்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளங்களில் ஒன்றாகிய முத்தயன்கட்டு குளத்தில் போதியளவு நீர் நிரம்பி காணப்படுகின்ற போதிலும், தமக்கான நீர் விநியோகம் உரிய முறையில் விநியோகிக்கப்படவில்லை. உரிய முறையில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படாமையினால் குடிநீர் தேவை மற்றம் பயிர்களுக்கான நீர் தேவை என்பனவற்றை பூர்த்தி செய்யமுடியவில்லை. இதுதொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு தெரியப்புடுத்தியும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என என மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

வெடுக்குநாறி மலையில் கைதானவர்களை விடுவிக்க கோரி வாகனப் பேரணி

வெடுக்குநாறிமலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரி வாகனப் பேரணியொன்று இன்று (16) இடம்பெறவுள்ளது. இந்தப் பேரணி நல்லூரிலிருந்து வவுனியா நோக்கி பயணிப்பதற்கு ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.

மீனவர் ஒருவர் சடலமாக மீட்பு

அம்பாறை, சாய்ந்தமருது பகுதியில் மீனவர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (15) மாலை இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் சாய்ந்தமருது பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.