பசில் ராஜபக்ஷவுக்கு கட்சிக்குள் செல்வாக்கு சரிந்து வருகிறது: 80க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து கட்சியில் இணைவு
பொதுஜன பெரமுண கட்சியின் ஸ்தாபகரும் , அதன் முன்னாள் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷவுக்கு கட்சிக்குள் செல்வாக்கு சரிந்து வருவதாகத் தெரிய வந்துள்ளது.
தற்போதைய நிலையில் பொதுஜன பெரமுண கட்சியின் அதிருப்தியாளர்கள் தவிர, 80க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் கட்சியில் இணைந்து செயற்படுகின்றனர் எனினும் பசில் ராஜபக்ஷ அண்மையில் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய பின்னர் சுமார் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே அவரைச் சந்தித்துள்ளார்கள்.
அதற்கு மேலதிகமாக ஒருசில ஆளுனர்களும் பசில் ராஜபக்ஷவைச் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் கட்சிக்குள் தனக்கான செல்வாக்கு மிக மோசமாக வீழ்ச்சியுற்றிருப்பது குறித்து பசில் ராஜபக்ஷ கடும் அதிர்ச்சியடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.