மியான்மரில் இருந்து மீட்கப்பட்ட இலங்கையர்கள்: தாய்நாடு அழைத்துவர ஆதரவளிக்கும் தாய்லாந்து

OruvanOruvan

Thailand and Sri Lanka

மியான்மரில் இருந்து மீட்கப்பட்ட இலங்கையர்களை உடனடியாக நாட்டுக்கு அழைத்துவருவது தொடர்பில் தாய்லாந்து மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சுகளுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இரு தரப்புக்கும் இடையில் தொலைபேசி ஊடாக இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மியான்மரின் இணையவழி குற்றச்செயல்கள் (cyber crime) இடம்பெறும் பகுதியில் 56 இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 8 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் மியான்மர் அரசாங்கம் அண்மையில் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.

இந்த நிலையில், குறித்த குழுவினரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு தேவையான ஆதரவை வழங்குமாறு தாய்லாந்து வெளிவிவகார அமைச்சரிடம் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்படி, இந்த விடயம் தொடர்பில் தேவையான ஆதரவை வழங்குவதற்கு தாய்லாந்து வெளிவிவகார அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.