புகையிலை பாவனையால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்: நாளாந்தம் 520 மில்லியன் ரூபா செலவு

OruvanOruvan

Quit Smoking

புகையிலை பாவனையால் தினமும் 50 பேர் உயிரிழப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையை மேற்கோள்காட்டி, மதுபான மற்றும் போதைப்பொருள் தகவல் மையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் சம்பத் டி சேரம் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்நாட்டில் 83 வீதமான மரணங்கள் தொற்றாத நோய்களினால் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தொற்றாத நோய்களை ஏற்படுத்தும் நான்கு முக்கிய காரணிகளில் புகைபிடித்தல் ஒன்று என சம்பத் டி சேரம் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இலங்கையர்கள் புகைபிடிப்பதற்காக நாளாந்தம் 520 மில்லியன் ரூபாவை செலவிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இலங்கையில் மக்களின் சிகரட் பாவனை 9.1 வீதத்தால் குறைந்துள்ள நிலையில் இன்னும் 1.5 மில்லியன் மக்கள் சிகரட்டை பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையை கட்டுப்படுத்துவதற்காக பல மாற்றங்களுக்கான பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்டும் அந்த முன்மொழிவுகள் நடைமுறைப்படுத்தப்படாமை வருத்தமளிப்பதாக சம்பத் டி சேரம் மேலும் தெரிவித்தார்.