பிரிந்து சென்ற தொழிற்சங்க தலைவர்களை மீண்டும் அழைக்கும் ராஜபக்ச அணி: பசில் உத்தரவு, தொலைபேசி அழைப்புத் தொடர்கிறது

OruvanOruvan

SLPP Getty Images

மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிச் சென்றுள்ள தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் இணைச் சங்கங்களில் தலைவர்களை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ளும் அரசியல் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

துரித வேலைத்திட்டத்தை உருவாக்குமாறு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, கட்சியின் மூத்த உறுப்பினர்களைக் கேட்டுள்ளார்.

பொதுஜன பெரமுனவை சேர்ந்த பல தொழிற்சங்கங்கள், அதன் துணைச் சங்கங்கள் தற்போது புதிய கூட்டணியுடன் இணைந்துள்ளதுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்து வருகின்றன.

இதன் காரணமாக பொதுஜன பெரமுனவின் தொழிசங்க அமைபை்பு செயலிழந்து காணப்படுகிறது.

இந்த நிலைமையை எப்படியாவது தடுக்கும் நோக்கில் கட்சியின் நெலும் மாவத்தை அலுவலகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. புதிய கூட்டணியில் இணைந்துள்ள தொழிற்சங்க தலைவர்களை மீண்டும் கட்சியில் இணையுமாறு கோரி தொடர்ந்தும் தொலைபேசி அழைப்புகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள புதிய கூட்டணியின் முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் தலைவர் அசங்க ஸ்ரீநாத், மீண்டும் எப்போதும், பொதுஜன பெரமுனவுடன் இணைந்து அரசியலில் ஈடுபட போவதில்லை எனக்கூறியுள்ளார்.