பொதுஜன பெரமுனவின் கோரிக்கையை நிராகரித்த ரணில்: ஜனாதிபதித் தேர்தலை முதலில் நடத்த திட்டம்

OruvanOruvan

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒரு பிரிவினரின் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தரப்பில் இருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை என்பதுடன், ஜனாதிபதி தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும் என இவர்களுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் முன்கூட்டியே நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் விடயத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை கூறி வருகின்றனர்.

எம்.பிக்களிடம் இருந்து தேவையான ஆதரவை பெற முடியவில்லை

அத்துடன், பொதுத் தேர்தலின் ஊடாகவே கட்சியை மீள பலமாக கட்டியெழுப்ப முடியும் என பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுக்கு இவர்கள் அழுத்தமும் கொடுத்து வருகின்றனர்.

ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைக்காவிட்டால் நாடாளுமன்றத்தை கலைக்கும் தீர்மானமொன்றை நிறைவேற்றுவது குறித்து ஆலோசனைகளை நடத்தியுள்ளனர்.

ஆனால், எம்.பிக்களிடம் இருந்து தேவையான ஆதரவை பெற முடியாததால் இத்திட்டம் வெற்றியளிக்காதென பொதுஜன பெரமுனவின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.

ஜனாதிபதித் தேர்தலை உரிய காலப்பகுதியில் நடத்துவதே ரணிலின் திட்டமாக உள்ளது. பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் களமிறங்கினால் வெற்றிபெற முடியும் என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி இருக்கிறார்.

பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால் அரசாங்கம் தோல்வியடைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது ரணிலில் திட்டமாக உள்ளது.