யாழ் குடும்பஸ்தரின் கொலை தொடர்பான காணொளி: கடற்படையினரின் அசமந்த போக்கு என குற்றச்சாட்டு

OruvanOruvan

Jaffna murder

யாழ், வட்டுக்கோட்டை குடும்பஸ்தரின் படுகொலையுடன் தொடர்புடைய காணொளி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடற்படையினரின் சிசிரிவியில் பதிவான காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், கடற்படையினர் மீதான அசமந்த போக்கே குடும்பஸ்தரின் மரணத்திற்கு காரணம் என உறவினர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நான்கு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய நிலையில் அவர்களை தடுப்பில் வைத்து விசாரிக்க நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Jaffna murder

Jaffna murder