ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்கான நிதி வழங்கப்படவில்லை: சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் என அமைச்சு அழுத்தம்

OruvanOruvan

Diana Gamage

2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற நவகமுவ பெரஹராவின் நேரடி ஒளிபரப்பிற்காக செலவிடப்பட்ட நிதித் தொகையை இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்கு சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே செலுத்தத் தவறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி இடம்பெற்ற நவகமுவ பெரஹராவின் நேரடி ஒளிபரப்பிற்காக இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்கு ஒன்பது இலட்சம் ரூபா செலுத்த தவறியுள்ளதாக கூறப்படுகின்றது.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே வேண்டுகோளுக்கு இணங்க நவகமு வரலாற்று புராணம் ஸ்ரீ சத்பத்தினி மகா ஆலயத்தின் 188 ஆவது ரந்தோலி பெரஹராவை நேரடியாக ஒளிபரப்புவதற்காக குறித்த நிதித் தொகை செலவிடப்பட்டாக கூறப்படுகின்றது.

நிலுவைத் தொகை குறித்து ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் பிரதம கணக்காளர், அமைச்சருக்கு பலதடவைகள் நினைவூட்டிய போதும் எதுவிதமான நிதித் தொகையும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் என ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

OruvanOruvan