கடற்படை சோதனைச்சாவடியேன்றி முகாம் அல்ல: கடற்படை பேச்சாளர் விளக்கம்

OruvanOruvan

Checking point

பொன்னாலை சந்தியில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவம் குறித்து விசாரணைகளை தொடங்கியுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் ஹயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.

எமது ஊடக நிறுவனத்திற்கு வழங்கிய செவ்வியில் இதனைக் குறிப்பிட்டிருந்தார். இதேவேளை குறித்த பகுதியில் அமைந்திருப்பது கடற்படையினரின் சோதனைச்சாவடி எனவும் கடற்படை முகாம் அல்ல எனவும் கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர், சோதனைச் சாவடியில் இரு கடற்படையினர் இருந்ததாகவும், அவர்களில் ஒருவர் சிவில் உடையிலும் மற்றையவர் சீருடையிலும் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குற்றச்செயலை ஏன் கடற்படையினர் தடுத்து நிறுத்தவில்லை என்ற விடயம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் கடற்படைப் பேச்சாளர் கெப்டன் ஹயான் விக்ரமசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.