பூதாகரமாகும் வெடுக்குநாறி விடயம்: சிறையில் உள்ளவர்கள் உண்ணாவிரதம்

OruvanOruvan

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய விவகாரம் தொடர்பில் கைது செய்ப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் தமக்கு நீதிக்கோரி வவுனியா சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

வவுனியா, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட எட்டு பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நேற்றையதினம் வவுனியா நீதவான் நீதிமன்று உத்தரவு பிறப்பித்திருந்தது.

.இந்த நிலையில் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் தமக்கு நீதிகோரி உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களை சிறைச்சாலைக்கு சென்று உறவினர்கள் பார்வையிட்டபோதே குறித்த எட்டு பேரும் நேற்றுமுதல் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

திலகநாதன் கிந்துஜன் , சுப்பிரமணியம் தவபாலசிங்கம் , மதிமுகராசா , துரைராசா தமிழச்செல்வன் , விநாயகமூர்த்தி ஆகியோரே நேற்று முதல் உணவு தவிர்ப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

விசேட விசாரணை குழுவுக்கு ஒப்புதல்

வெடுக்குநாறி மலையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதற்கென விசேட விசாரணை குழுவொன்றும் நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.