விடை காணா புதிராய் தொடரும் எக்னெலிகொடவின் வழக்கு விசாரணை: எப்போது நீதி கிடைக்கும்?

OruvanOruvan

Journalist prageeth eknaligoda

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் 09 இராணுவ புலனாய்வு உத்தியோகத்தர்களுக்கு எதிரான வழக்கு நடைபெற்றுவருகின்றது.

இவர்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவில் மேல் நீதிமன்ற பீடத்தில் இரண்டு இடங்கள் வெற்றிடமாக இருப்பதால் வழக்கு விசாரணையை எதிர்வரும் மே மாதம் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

கிரித்தலே இராணுவ முகாமின் முன்னாள் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் ஷம்மி குமாரரத்ன உட்பட 09 இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு எதிரான இந்த வழக்கை விசாரிப்பதற்காக சமத் மொராயஸ், தமித் தோட்டவத்த மற்றும் மகேன் வீரமன் ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் ஒன்றை பிரதம நீதியரசர் பெயரிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், நீதிபதி சமத் மொரேஸ் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாலும், உறுப்பினர் நீதிபதி தமித் தோட்டவத்த தனிப்பட்ட காரணங்களுக்காக வழக்கு விசாரணையில் இருந்து விலகியதாலும், தற்போது மூவரடங்கிய நீதிபதிகள் குழாமில் இரண்டு பதவிகள் வெற்றிடமாக உள்ளன.

வழக்கை விசாரிக்க, வெற்றிடமாக உள்ள பதவிகளுக்கு புதிய நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என, மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவின் உறுப்பினர், நீதிபதி மகேன் வீரமன், தலைமை நீதிபதிக்கு கோரிக்கை அனுப்பியுள்ளார்.

2010ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் திகதிக்கிடையிலான காலப்பகுதியில் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.