மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் விபத்து: வடக்கு - கிழக்கு செய்திகள் ஒரே பார்வையில்

OruvanOruvan

North & East 14.03.2024

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் விபத்து

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதான வீதியில் இன்று (14) பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேரூந்து ஒன்று வீதியோரமாக இரும்பு தளபாடங்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய ரக லொறியான பட்டா ரக வாகனமொன்றில் மோதுண்டு இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்தில் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் பொலிஸார் திடீர் சோதனை

நாடாளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் கீழ் மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் பொலிஸாரினால் இன்று (14) விசேட சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. களுவாஞ்சிகுடி பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார வவுனியா விஜயம்

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார வவுனியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டார். இந்தச் சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட கட்சி அலுவலகத்தில் கட்சி ஆதரவாளர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

OruvanOruvan

யாழில் கசிப்புடன் கைதான இளைஞனுக்கு 09 மாத சிறை

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கைதான 19 வயது இளைஞனுக்கு 50 ஆயிரம் ரூபாய் தண்டமும் 09 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞன் முன்னரும் கசிப்புடன் கைதாகி , நீதிமன்றால் தண்டிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

🛑Live : யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா ஆரம்பம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் சற்று முன்னர் கோலாகலமாக ஆரம்பமாகியது. மேலும, பட்டமளிப்பு விழா எதிர்வரும் சனிக்கிழமை வரையில் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.

வலி.வடக்கில் விடுக்கப்பட்ட காணிகளுக்குள் திருட்டுக்கள் அதிகரிப்பு

யாழ்ப்பாணம் வலி வடக்கு பிரதேசங்களில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்குள் திருடர்கள் புகுந்து பெறுமதியான மரங்களை வெட்டி எடுத்து செல்வதுடன் , வீட்டில் காணப்படும் பெறுமதியான பொருட்களையும் களவாடி செல்லும் சம்பவங்கள் பதிவாகியுள்ளது.

OruvanOruvan

யாழ்.பண்ணை கடலில் பாய்ந்த பொலிஸாரின் முச்சக்கர வண்டி

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை வீதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த பொலிசாரின் முச்சக்கர வண்டி , கடலில் பாய்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

OruvanOruvan

முல்லைத்தீவு ஊடகவியலாளர் விசாரணைப்பிரிவுக்கு அழைப்பு

முல்லைத்தீவு ஊடகவியலாளர் திவாகர் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு நாளை அழைக்கப்பட்டுள்ளார். அழைக்கப்புக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் குறித்த ஊடகவியலாளர் முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரியையும் மாவட்ட பயங்கரவாத தடுப்பு பிரிவினரையும் சந்தித்த போதும் அவர்களிடமிருந்தும் உரிய பதில் கிடைக்கவில்லையென எமது செய்தியாளர் தெரிவித்தார்.

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை - கைதானவர்களுக்கு தடுப்புக்காவல்

யாழ்-வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை சம்பவம் தொடர்பில் கைதான ஐவரையும் 24 மணி நேரம் பொலிஸ் தடுப்பு காவலில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள மல்லாகம் நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.குறித்த சந்தேக நபர்கள் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (13.03.2024) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பில் விஷேட சோதனை நடவடிக்கை

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் பொலிஸார் மற்றும் விஷேட அதிரடி படையினர் இணைந்து விஷேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். யுக்திய நடவடிக்கையின் ஓர் பகுதியாக நேற்று (13) விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

OruvanOruvan