பெண்ணை கொலை செய்து விட்டு தற்கொலை செய்த ஆண்?: ஹோட்டல் அறையில் மீட்கப்பட்ட சடலங்கள் தொடர்பில் தீவிர விசாரணை

OruvanOruvan

Srilanka Police

பொத்துவில் - அறுகம்பே பகுதியிலுள்ள ஹோட்டல் அறை ஒன்றிலிருந்து இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரது சடலங்களே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

பெண்ணை கொலை செய்த ஆண் தற்கொலை

குறித்த இருவரும் தங்கியிருந்த ஹோட்டல் அறை நீண்ட நேரம் திறக்கப்படாததை அடுத்து, ஹோட்டல் நிர்வாகம், பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது, பெண்ணை கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்த ஆண், பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

OruvanOruvan

Srilanka police

மீட்கப்பட்ட சடலங்கள்

இதையடுத்து, பொலிஸாரின் உதவியுடன் அறை திறக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், வெட்டு காயங்களுடன் பெண்ணின் சடலம் காணப்பட்டுள்ளது.

குளியலறையில் குறித்த ஆண்ணின் சடலம், தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மஹகலுகொல்ல பகுதியைச் சேர்ந்த 35 வயதான பெண் மற்றும் பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 51 வயதான ஆண் ஆகியோரே இவ்வாறு சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் பொத்துவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.