தேசிய கல்வியியல் கல்லூரி தொடர்பில் அறிவிப்பு: புதிய மாணவர்கள் சேர்க்கை

OruvanOruvan

Gazette released

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை ஆட்சேர்ப்பதற்கான விண்ணப்பம் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் மார்ச் – 15 ஆம் திகதி வெளியாகும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் நிகழ்நிலை (Online) மூலம் கோரப்படவுள்ளன. அத்துடன், கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் விண்ணப்பங்களைப் பிரசுரிப்பதற்கான ஏற்பாடுகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த சில வாரங்களாக, மாணவர்கள் இது தொடர்பில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர்.

எனவே, கல்வி அமைச்சிடம் தேசிய கல்வியியல் கல்லூரி வர்த்தமானி தொடர்பில் வினவிய போது, வர்த்தமானி அறிவித்தல் மார்ச் – 15 இல் வெளிவரும் எனத் தெரிவித்துள்ளது.