மெல்போர்னில் அதிக வெப்பம்: இலங்கையைச் சேர்ந்த வயதான தம்பதியினர் சடலங்களாக மீட்பு

OruvanOruvan

The bodies of a man and a woman have been found in Melbourne's outer north-east. (9News)

மெல்போர்னின் வட-கிழக்கில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து இலங்கையைச் சேர்ந்த வயதான தம்பதியினர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

டோய்ன் காஸ்பெர்ஸ் மற்றும் அவரது மனைவி மார்லின் ஆகியேரே செவ்வாய்க்கிழமை (12) காலை அந் நாட்டு நேரப்படி 9.30 மணியளவில் வாரண்டிட், ஆன்டிகோனி கோர்ட்டில் (Antigoni Court, Warrandyte)அமைந்துள்ள அவர்களது வீட்டிற்கு வெளியே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இறப்புக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

எனினும், வாரண்டிட்டில் நீடித்த அதகளவான வெப்ப நிலை அவர்களது இறப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை வார்ரண்டிட்டில் வெப்பநிலை 38 செல்சியஸாக பதிவான போது, ​​அவர்களின் சோகமான மறைவை சிசிடிவி படம்பிடித்ததாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.

இந் நிலையில், தம்பதியரின் மரணம் சந்தேகத்திற்குரியதாக கருதப்படவில்லை என்று பொலிஸார் புதன்கிழமை (13) உறுதிப்படுத்தினர்.

அதேநேரம், சடலங்கள் தொடர்பான பிரேத பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

டோய்ன் காஸ்பெர்ஸ், மெல்போர்னின் இலங்கை சமூகத்திலும் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார் மற்றும் அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை இனக்குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பர்கர் அசோசியேஷன் கழகத்தில் துணைத் தலைவராக இருந்ததாக வீட்டின் அயலவர்கள் தெரிவித்தனர்.

OruvanOruvan

The bodies of a man and a woman have been found in Melbourne's outer north-east.

OruvanOruvan

The bodies of a man and a woman have been found in Melbourne's outer north-east.