கல்வி, கட்டமைப்பு ரீதியாக அழிவு: தென்னிலங்கையின் தமிழின விரோத போக்கு

OruvanOruvan

Education syestem

எண்ணிக்கையில் குறைந்திருந்தாலும் கல்வி அறிவால் முழு நாட்டையும் தமிழர்களால் ஆட்சி செய்ய முடியுமென, வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் , அழிக்கப்பட்ட சமூகத்தினதும் காணாமலாக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்டோரதும் பிரதிநிதிகள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் பொருளாதாரம் மற்றும் கல்வி இரண்டிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழர்களின் கல்வி பின்னணி

பிரித்தானிய ஆட்சி காலத்தில் தமிழர் தரப்பில் ஆங்கிலம் கற்ற படித்த தரப்பினர் எனக் கருதினால் குறிப்பாக வடகிழக்கை சேர்ந்த தமிழர்களே கோலோச்சியிருந்தனர்.

அதற்கு சிறந்த உதாரணமாக பிரித்தானியா கல்வி மான்களுக்கு வழங்கப்படும் கௌரவமான சேர் (Sir) பட்டங்களை அருணாச்சலம்,இராமநாதன் போன்றோர் அலங்கரித்திருப்பதை நாம் வரலாற்றில் பார்த்திருக்கிறோம்.

அந்த வகையில் பிரித்தானியாவில் நிர்வாக உயர் பதவிகளில் தமிழர்கள் பணியாற்றினர்.

இதனால் சிங்கள மக்களும் சிங்கள தலைவர்களும் பிரித்தானிய அரசாங்கத்தால் குறிப்பிட்டளவில் ஒதுக்கப்பட்டிருந்தனர்.

இதுவே, 1956ஆம் ஆண்டு தனிச் சிங்கள சட்டத்திற்கு அத்திபாரம் இட்டது.

ஆங்கில கல்வியை கற்ற தமிழினம் அரச பதவிகள் ஊடாக பொருளாதார ரீதியாக மேன்மையடைந்தமை சிங்கள தலைவர்களுக்கு எரிச்சலூட்டியது.

தமிழர் கல்வியில் வீழ்ச்சி

1971ஆம் ஆண்டு அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட தரப்படுத்துலும் தமிழர் கல்வியில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து 1981ஆம் ஆண்டு ஜே.ஆ.ஜயவர்தன அரசாங்கத்தில் யாழ். பொது நூலகம் எரிக்கப்பட்டமையும் தமிழர் தரப்பு கல்வியை கட்டமைப்பு ரீதியாக வீழ்த்தியது.

2009ஆம் ஆண்டு போர் ஆயுத ரீதியாக மௌனித்த பின்னர் தமிழர்களின் கல்வி மேலும் திட்டமிட்ட வகையில் அழிக்கப்பட்டுவருகின்றது.

இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட சமூக சீரழிவுக்குள் உள்ளாகும் வகையிலான காரியங்களை தென்னிலங்கை முகவர்கள் ஊடாக மேற்கொண்டுவருகின்றது.

ஆகவே கல்வி ரீதியாக மீளவும் தலைநிமிருவதற்கு தமிழ் சமூகம் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவது காலத்தின் தேவை.