அனுரவின் இந்திய பயணம் - உயர்ஸ்தானிகர் கூறுவதென்ன?: ஜே.வி.பி. அரசில் நிதி அமைச்சு குறித்தும் தகவல் வெளியானது

OruvanOruvan

ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் இந்திய பயணம் இலங்கைத் தீவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ஒரு சம்பவமாகும்.

அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களும் உறுப்பினர்களும் அனுரவின் இந்திய பயணம் தொடர்பில் பலவிதமான விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.

இந்திய விஸ்தரிப்புவாதம் பற்றி வகுப்புகளை எடுத்த ஜே.வி.பி. மீண்டும் இந்தியாவுடன் உறவில் ஈடுபடத் தொடங்கியுள்ளதாகக் கூறினர்.

அனுர ஏன் இந்தியா சென்றார்?

ஆனால், தமது கட்சி பூகோள அரசியல் மற்றும் அதன் போக்கு பற்றிய நிலைமைகளை கடந்த பல தசாப்தங்களாக அவதானித்து வருவதால் இந்தியாவின் விசேட அழைப்பை ஏற்றுக்கொண்டதுடன், அனுரவும் இந்தியா சென்றதாக ஜே.வி.பி. கூறியது.

இலங்கைத் தீவில் ஜே.வி.பி.யின் பயணம் தொடர்பில் பலவிதமான கருத்தாடல்கள் உள்ள போதிலும், ஜே.வி.பியை இந்தியா ஏன் அழைத்தது என்பது தொடர்பில் சரியான விளக்கத்தை அவர்கள் இதுவரை முன்வைக்கவில்லை.

எவ்வாறாயினும், கடந்த வாரம் முதன்முறையாக அனுராவின் இந்தியப் பயணம் பற்றிய விளக்கம் இந்திய தரப்பிலிருந்து பகிரப்பட்டது.

OruvanOruvan

Anura Kumara Dissanayake and Jaishankar

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ‘economynext’ இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வியில்,

”இலங்கைத் தலைவர்களுக்கு விடுக்கப்படும் இந்த அழைப்புகள் சாதாரண அழைப்புகள்தான். கலாசார உறவுகளுக்கான இந்திய கவுன்சில், பிற நாடுகளில் உள்ள வணிகத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் கலாச்சாரத்தை பாதுகாக்கும் தலைவர்களை இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கான ஒரு திட்டத்தை கொண்டுள்ளது.

அந்த திட்டத்தின் கீழ்தான் அனுர இந்தியாவுக்கு அழைக்கப்பட்டார்.” என்றார்.

சுனில் ஹந்துன்நெத்திக்கு நிதி அமைச்சு வழங்கப்படாது

இதன்மூலம், அனுரவின் பயணம் குறித்த இந்தியாவின் கருத்து முதல் முறையாக வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், ஜே.வி.பி தலைமையிலான அரசியல் கூட்டணியான தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் எதிர்காலத்தில் அமையபெற்றால் அதன் நிதி அமைச்சராக நியமிக்கப்படும் நபர் தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பொருளாதாக் கொள்கைகள் குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தொடர்ந்து பேசி வருவதால், அவதே நிதியமைச்சராக இருப்பார் என்பது பலரது பொதுவான கருத்து.

ஆனால், தற்போது உருவாகியுள்ள புதிய பொருளாதார நெருக்கடியில், தாராளவாத பொருளாதாரச் சிந்தனைகள் கொண்ட ஒருவரை நியமிக்க வேண்டும் என பலரும் நினைக்கின்றனர்.

இதில் முன்னணியில் இருப்பது வேறு யாருமல்ல கலாநிதி ஹர்ஷ டி சில்வா. ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் ஹர்ஷ நிதியமைச்சராக வருவார் என்பது பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

இளம் நிதி அமைச்சரை கண்டறிந் ஜே.வி.பி

அதனால்தான் ஜே.வி.பியும் ஹர்ஷவுக்கு சமமான ஒரு இளம் தாராளவாத நிதியமைச்சரின் தேவை குறித்து சிந்திதுள்ளதாக அறிய முடிகிறது.

அதன்படி, ஜே.வி.பி சுனில் ஹந்துன்நெத்தியைத் தெரிவு செய்யாமல், இளம் தாராளவாத சிந்தனையாளராகக் கருதப்படும் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமையே நிதி அமைச்சராக நியமிக்கும் யோசனைகளை கொண்டுள்ளது.

ஹர்ஷன கொழும்பு பங்குச் சந்தையின் முன்னாள் பணிப்பாளர் ஆவார். தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார கவுன்சிலின் உறுப்பினராகவும் உள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பினர்கள் ஜே.வி.பி.யை சந்தித்த போது கலந்துரையாடலில் கலந்து கொண்ட ஜே.வி.பி பிரதிநிதிகளில் கலாநிதி ஹர்ஷனவும் ஒருவராகும்.

எதிர்வரும் தேர்தலுக்கான ஜே.வி.பியின் பொருளாதார திட்டத்தை தயாரிக்கும் குழுவில் ஹர்ஷன முக்கிய அங்கத்தவராகவும் இருக்கிறார்.

இதன்படி, அடுத்த ஜே.வி.பி அரசாங்கத்தில், ஹர்ஷனவுக்கு நிதியமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் அறியமுடிகிறது.