ரணிலை வேட்பாளர் எனக்கூறும் அளவுக்கு மொட்டுக்கட்சி பலவீனமடையவில்லை: தோல்வியடையும் வேட்பாளரை நிறுத்தவும் தயாரில்லை-திஸ்ஸ குட்டியராச்சி

OruvanOruvan

Tissa Kuttyarachchi

ஐக்கிய தேசியக்கட்சி பல வருடங்களாக முயற்சித்தும் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி பதவிக்கு கொண்டு வர முடியாமல் போனது எனவும் எனினும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அவரை ஜனாதிபதிக்கு தெரிவு செய்தது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,பொதுஜன பெரமுனவின் வாக்குகளினாலேயே அந்த பதவியில் இருக்கின்றார்.

எனினும் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க என்று கூறும் அளவுக்கு கட்சி பலவீனமடையவில்லை.

ஆனால் வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க அல்ல என்று கூறவும் அளவுக்கும் கட்சி அவசரப்படாது.

40 லட்சம் வாக்கு வங்கியை கொண்டுள்ள பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் நிறுத்தப்பட வேண்டுமாயின் அவர் மேலும் 15 லட்சம் வாக்குகளை கொண்டு சேர்க்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனை விடுத்து தோல்வியடையும் வேட்பாளரை நிறுத்தி தோல்வியை ஏற்றுக்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாரில்லை எனவும் திஸ்ஸ குட்டியராச்சி குறிப்பிட்டுள்ளார்.