கனடா செல்ல மறுத்த யாழ். இளைஞன் உயிரிழப்பு: வடக்கு - கிழக்கு செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

North-East News

கனடா செல்ல மறுத்த யாழ். இளைஞன் உயிரிழப்பு

கனடா செல்ல விரும்பாத மாற்றுத் திறனாளி ஒருவர் தனது உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த நபரின் சகோதரி கனடாவில் வசித்துவரம் நிலையில், தனது சகோதரனையும்,தனது தாயாரையும் விசிட் விசா மூலம் கனடாவிற்கு அழைக்க முற்பட்ட நிலையில் , இருவருக்கும் விசா கிடைத்துள்ளது.ஆனால் தான் கனடா வர மாட்டேன் என மாற்று திறனாளியான இளைஞன் கூறி வந்த நிலையில் நேற்றையதினம் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டிப்பர் மோதி இளைஞன் உயிரிழப்பு

கிளிநொச்சியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் பொன்னகர் பகுதியை சேர்ந்த சந்தானம் புஸ்பராசா என்ற 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ். இளைஞன் கொலை விவகாரம் - நான்கு சந்தேகநபர்கள் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை கடத்தி சென்று படுகொலை செய்த குற்றச்சாட்டில் கிளிநொச்சியில் பதுங்கியிருந்த நான்கு சந்தேகநபர்கள் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

வடக்கில் உள்ள சுற்றுலா தளங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பில் கலந்துரையாடல்

வட மாகாணத்தில் காணப்படும் சுற்றுலாத் தளங்களை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்வஞ்சல் பாண்டே உள்ளிட்ட குழுவினர் வட மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினர். இதில், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் இந்திய துணைத் தூதுவர் சாய் முரளியும் கலந்துக்கொண்டுள்ளார்.

வெடுக்குநாறி மலை விவகாரம் தொடர்பில் விசாரணை - விசேட குழு நியமனம்

வெடுக்குநாறி மலையில் ஏற்பட்ட முறுகல் நிலை தொடர்பில் விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் விடுக்கப்பட்ட கோரிக்கையினை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார். இந்த நிலையில், உண்மைகளை கண்டறிந்து, தேசிய நல்லிணக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் எதிர்காலத்தில் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.