மத மாற்றத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை: பதிவு செய்யப்படாத மத நிலையங்களை முற்றுகையிட முடிவு

OruvanOruvan

Prayer meeting

மக்களை அந்நிய மதங்களுக்கு மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடும் மத நிலையங்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து புத்தசாசனம்,சமய விவகாரங்கள் மற்றும் கலாசார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

பதிவு செய்யப்படாத மத நிலையங்களை முற்றுகையிடுவதற்கு பொலிஸ் திணைக்களத்தின் உதவியை பெற துறைக்கு பொறுப்பான அமைச்சர் விதுர விக்ரமநாயக்க முடிவு செய்துள்ளார்.

அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, இதற்கான நடவடிக்கை எடுக்குமாறு பௌத்த விவகார ஆணையாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளதுடன் அதற்காக பொலிஸ் மா அதிபரு்ககு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பௌத்த பீடங்களின் தலைமை பிக்குகளுடன் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த நடவடிக்கை குறித்து அமைச்சர் விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

சமய வழிப்பாட்டு தலங்கள்,பிக்குகள் சம்பந்தமான பிரச்சினைகள்,சமயத்தை திரிபுப்படுத்துவது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பௌத்த பிக்குகளும் அமைச்சரும் இதன் போது விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.