யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டு கொலை: கிளிநொச்சியில் பதுங்கியிருந்த நால்வர் கைது

OruvanOruvan

Kidnapped youth dies

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞரொருவர் கடத்தப்பட்டு வாள்வெட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

கிளிநொச்சி பகுதியில் பதுங்கியிருந்த நிலையில் நால்வரும் யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வட்டுக்கோட்டை அராலி பகுதியைச் சேர்ந்த 37, 32,25, 22 வயதானவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகநபர்களிடம் இருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் கைப்பற்றினர்.

காரைநகருக்கு சென்று விட்டு வட்டுக்கோட்டை திரும்பும்போது நேற்று இளைஞன் ஒருவர் கடத்தப்பட்டு வாள்வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 23 வயதான தவச்செல்வம் பவிதரன் என்பவரே உயிரிழந்தார்.

கடத்தப்பட்ட இளைஞன் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - பொன்னாலை கடற்படை முகாம் முன்பாக நேற்று மாலை கடத்தபட்டவர் வாள் வெட்டுக்கு இலக்காகி மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ். காரைநகரைச் சேர்ந்த 24 வயதான தவச்செல்வம் பவித்திரன் என்பரே இவ்வாறு வொள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

காரைநகரில் இருந்து பொன்னாலையூடாக வட்டு தென்மேற்கு பகுதியில் உள்ள தனது வீடு நோக்கி மனைவியுடன் மோட்டார் வாகனத்தில் பயணித்துள்ளார்.

இதனிடையே, வாளுடன் காரில் காரைநகர் நோக்கி பயணித்தவர்கள் அச்சுறுத்திய நிலையில் குறித்த இளைஞன் தனது மனைவியுடன் கடற்படை முகாமினுள் சென்று அடைக்கலம் கோரியுள்ளார்.

கடற்படையினர் எமக்கு பிரச்சினை வரும் வெளியேறுமாறு தம்பதியினரை கலைத்துள்ளனர்.

இந்நிலையில், கடற்படை முகாம் முன்னே இளைஞனை ஒரு காரிலும் மனைவியை மற்றுமொரு காரிலும் அச்சுறுத்திய வன்முறைக்கும்பல் கடத்தி சென்ற நிலையில் இளைஞன் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில் வட்டுக்கோட்டை ஆதார வைத்தியசாலையில் சந்தேநபர்களால் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து வைத்தியாசாலையினர் குறித்த நபரை யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பொழுது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதேவேளை, மனைவி அராலியிலுள்ள வீடொன்றில் பூட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் அயலவர்கள் முரண்பட்டமையினால் வன்முறைக்கும்பலினால் சித்தன்கேணி பகுதியில் குறித்த பெண்ணை இறக்கிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

தொடர்ந்து இறந்த நபரின் மனைவியால் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் பொலிஸார் சந்தேகநபர்களில் மூவரை அடையாளம் கண்டுள்ளனர்

இதேவேளை, வட்டு பொலிஸ் நிலையத்திற்கு யாழ். மாவட்ட குற்றதடுப்பு பிரிவினர் விரைந்துள்ள நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் இணைந்து மேலதிக விசாரணைகள் ஆரப்பிக்கபட்டுள்ளன.

கடந்த வருடம் ஏற்பட்ட வாள்வெட்டு சம்பவம் ஒன்றுடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவே குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.