மன்னார் 'சதோச' மனித புதைகுழி வழக்கு -சட்ட வைத்திய அதிகாரி மன்றில் முன்னிலையாக உத்தரவு: வடக்கு - கிழக்கு செய்திகள் ஒரே பார்வையில்....

OruvanOruvan

North - East News updates 11.03.2024

மன்னார் 'சதோச' மனித புதைகுழி வழக்கு -சட்ட வைத்திய அதிகாரி மன்றில் முன்னிலையாக உத்தரவு

மன்னார் சதோச மனித புதைகுழி வழக்கானது இன்றைய தினம் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் பேராசிரியர் ராஜ் சோம தேவ், தடவியல் பொலிஸார் உட்பட அனைத்து தரப்பினரினதும் அறிக்கைகள் பெற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதுடன் சட்ட வைத்திய அதிகாரி ராஜபக்ஸ அவர்கள் அடுத்த தவணையில் நேரடியாக நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும் கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

கேரளா கஞ்சாவுடன் இளம் பெண் கைது

முல்லைத்தீவு-தாழையடி பிரதேசத்தில் கேரளா கஞ்சாவுடன் இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் பேருந்தொன்றினை சோதனைக்குட்படுத்திய போது குறித்த பெண்ணிடமிருந்த கைப்பையில் 500 கிராம் கேரளா கஞ்சாவுடன் 27 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெடுக்குநாறிமலை சம்பவத்திற்கு எழும் கடும் எதிர்பபலைகள்- போராட்டத்திற்கு அழைப்பு

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட அடாவடித்தனத்திற்கு யாழ். மாநகர முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் எதிர்ப்பை வெளியிட்டள்ளதுடன், நல்லூரில் இன்று இடம்பெறவள்ள எதிர்ப்பு போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

மரதன் போட்டியில் கலந்து கொண்ட மாணவன் மரணம்; திருக்கோவில் வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

திருக்கோவில் மரதன் ஓட்ட போட்டியில் இன்று கலந்து கொண்ட 16 வயதுடைய மாணவன் ஒருவர் திடீர் மயக்கமுற்ற நிலையில் உயிரிழந்துள்ளார். இந் நிலையில் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை உடனடியாக வழங்கவில்லை என கூறி வைத்தியசாலைக்கு முன்பாக மாணவர்களும், பிரதேச மக்களும் தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

OruvanOruvan

Thirukkovil Protest (Photo By: Dinesh Vadivel)

OruvanOruvan

Thirukkovil Protest (Photo By: Dinesh Vadivel)

OruvanOruvan

Thirukkovil Protest (Photo By: Dinesh Vadivel)

33 வருடங்களின் பின் சொந்த மண்ணில் கால் பதித்த மக்கள்

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் கடந்த 33 வருட காலமாக இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த சுமார் 67 ஏக்கர் காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்கப்பட்ட நிலையில், காங்கேசன்துறை தெற்கு மற்றும் மயிலிட்டி தெற்கு ஆகிய இரு கிராம சேவையாளர் பிரிவில் உள்ள காணிகளுக்குள் 33 வருடங்களுக்கு பின் மக்கள் இன்று திரும்பியுள்ளனர்.

OruvanOruvan

தமது காணிகளை விடுவிக்கக்கோரி முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் கேப்பாப்பிலவு மக்கள் மகஜர் கையளிப்பு

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி இன்று மாவட்ட செயலகத்திற்கு சென்று அரசாங்க அதிபரைச் சந்தித்து கலந்துரையாடியதுடன் ஜனாதிபதி, மற்றும் அரசாங்க அதிபருக்கான மகஜர் கையளித்துள்ளனர்.

OruvanOruvan

முன்னாள் அரசியல் கைதி கொழும்பு பயங்கரவாத விசாரணைக்கு அழைப்பு

வவுனியாவில் வசிக்கும் முன்னாள் அரசியல் கைதியும், போராளிகள் நலன்புரிச் சங்க தலைவருமான செ.அரவிந்தன் என்பவரை கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு (ரிஐடி) அழைக்கப்பட்டுள்ளார். இதற்கான கடிதம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் குறித்த அரசியல் கைதியின் வீட்டிற்கு சென்று நேற்று வழங்கப்பட்டுள்ளது.

காணிகளை விடுவிக்க கேப்பாப்புலவு மக்கள் கோரிக்கை

முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் தமது காணிகளை விரைவில் விடுவிக்கக்கோரி ஜனாதிபதிக்கு இன்று முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர். சுமார் 171 ஏக்கர் காணிகளை விடுக்கவே இந்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் கசிப்புடன் சிறுவன் கைது

யாழ்ப்பாணம் - சரசாலை பகுதியில் நான்கு லீட்டர் கசிப்புடன் 15 வயது சிறுவன் ஒருவரை பொலிஸார் கைத செய்துள்ளனர்.கைதான சிறுவனிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வடமராட்சியில் நிமோனியாவால் இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - வடமராட்சி துன்னாலை வடக்கு, கரவெட்டியை சேர்ந்த முத்துலிங்கம் சிவதர்ஷன் (வயது 29) எனும் இளைஞர் நியூமோனியா காய்ச்சலினால் உயிரிழந்துள்ளார்.

இராணுவ வாகனம் மோதி வயோதிப பெண் படுகாயம்

இராணுவ வாகனம் மோதியதில் சிதம்பரப்பிள்ளை வசந்தாதேவி (வயது 60) என்ற வயோதிப பெண் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இராணுவத்தினரால் பொதுமக்களின் ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கப்பட்டதற்கான ஆவண பத்திரங்கள் கையளிப்பு

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உயர் பாதுகாப்பு வலயமாக பாதுகாப்பு தரப்பினரது கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களின் ஒரு தொகுதி காணி நிலங்கள் விடுவிக்கப்பட்டதற்கான ஆவண பத்திரங்கள் கையளிக்கும் நிகழ்வு நேற்று யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.யாழ் மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் சுமார் 70 ஏக்கர் காணி நிலங்களும், கிளிநொச்சி மாவடத்தில் சுமார் 40 ஏக்கர் காணி நிலங்களும் விடுவிக்கப்பட்டுள்ளன.

OruvanOruvan