பயங்கரவாத விசாரணைப்பிரிவால் முன்னாள் போராளிக்கு அழைப்பாணை: வாக்குமூலம் பெற்றுக்கொள்ள நடவடிக்கை

OruvanOruvan

முன்னாள் போராளி ஒருவருக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா தோணிக்கல் பகுதியில் வசிக்கும், போராளிகள் நலன்புரிச் சங்க தலைவர் செல்வநாயகம் அரவிந்தன் (ஆனந்தவர்மன்) என்பவரையே கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளது.

12 ஆம் திகதி காலை 9 மணிக்கு கொழும்பில் உள்ள பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு வாக்கு மூலம் வழங்க வருமாறு அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான கடிதம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் குறித்த அரசியல் கைதியின் வீட்டிற்கு சென்று நேற்று வழங்கப்பட்டுள்ளது.

அந்த அழைப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“விசாரணை பிரிவு ஒன்றின் மூலம் முகநூல் கணக்கு சம்மந்தமாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக விசாரணையை மேற்கொள்வதற்கு 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு இல149, கெப்பிட்டல் கட்டிடம், நாரன்பிட்ட முகவரியில் விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரியை சந்திக்குமாறு அழைக்கின்றோம்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.