முக்கிய நபர் தொடர்பில் தீர்மானத்தை எடுக்க போகும் மொட்டுக்கட்சி: கட்சியின் தலைமைக்கு கடும் அழுத்தம்

OruvanOruvan

ஆளும் கட்சியின் பிரதான பதவியை வகிக்கும் ஒருவர் தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தல் குறித்து தற்போதே எதனையும் கூறவேண்டாம் என கட்சி தீர்மானத்தை எடுத்துள்ள நிலையில், அவர் நீண்டகாலமாக ஒரு வேட்பாளருக்கு ஆதரவாக பகிரங்கமாக வேலை செய்து வந்த போதிலும் பொதுஜன பெரமுன அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

எனினும் அண்மைய காலமாக கட்சியின் நிலைப்பாடு தனக்கு அவசியம் இல்லை, பலவீனமான வேட்பாளரை நிறுத்தினால், கட்சியை விட்டு விலகுவேன் என பெரிய கதைகளை கூற ஆரம்பித்துள்ளதால்,அவருக்கு எதிராக முடிவு ஒன்றை எடுக்குமாறு கட்சியின் கீழ் மட்டத்தில் இருந்து கட்சியின் தலைமைக்கும் கடும் அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தல் நெருங்கும் போது அவர் ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்து விடுவார் என்ற கதைகளும் சில மாதங்களாக பரவி வருகிறது. இது குறித்து கட்சியின் கம்பஹா மாவட்ட தரப்பும் உயர் மட்டத்திற்கு தெரியப்படுத்தியுள்ளது.

அவர் கட்சியில் இருந்து விலக போவது உறுதி என்பதால் மாவட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பு பணிகளுக்கு தொடர்ந்தும் பாதிப்பு ஏற்பட இடமளிக்க கூடாது என நிலைப்பாடும் கட்சிக்குள் மேலோங்கியுள்ளது.

இதன் காரணமாக அடுத்த இடத்தில் இருக்கும் ஒருவருக்கு மாவட்டத்தின் தலைமை பொறுப்பை வழங்க பொதுஜன பெரமுன முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.