சர்வதேச அரங்கில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கோட்டாபயவின் புத்தகம்: 'சதி' என்ற கூற்றை முன்னாள் ஜனாதிபதி எழுதியிருக்கக் கூடாது - விமல்

OruvanOruvan

Copies of the ‘The Conspiracy’ book written by toppled Sri Lankan president GR (Photo Credit: AFP)

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் புதிய புத்தகம் தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

அந்தப் புத்தகத்தில் கோட்டபாய, தான் 2022 இல் இலங்கையின் ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு‍ சர்வதேச அனுசரணையுடனான "சதிப் புரட்சியே" காரணம் என குறிப்பிட்டிருந்தார்.

ரஷ்யாவின் கேள்வி

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகம்,

கோட்டபாய ராஜபக்ஷவினால் புதிதாக வெளியிடப்பட்ட புத்தகம் பற்றி இலங்கை பத்திரிகைகளில் வெளியானதை கவனித்தோம்.

அதில், வெளிநாட்டு தூதுவர்கள் இலங்கைக்கு இராணுவ நோக்கங்களுக்காக வருகை தருவது கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

எந்தெந்த நாடுகளின் இராஜதந்திர பிரதிநிதிகள் என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும்? என ரஷ்ய தூதரகம் கேள்வி எழுப்பியுள்ளது.

'சதி' என்ற கூற்றை கோட்டா எழுதியிருக்க கூடாது - விமல் வீரவன்ச

இந்நூல் குறித்து கருத்து தெரிவித்த கோட்டாபயவின் நெருங்கிய நண்பராக இருந்து பின்னர் அவரது அரசாங்கத்தில் இருந்து விலகிய பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச,

ஜனாதிபதி பதவியில் இருந்து தம்மை வெளியேற்றிய சதி என்ற தனது கூற்றை கோட்டாபய ராஜபக்ச எழுதியிருக்கக் கூடாது.

இந்த புத்தகத்தை தான் இன்னும் பார்க்கவில்லை என்றும், ஆனால் அதன் வாசகர்கள் தமக்கு கூறியதை வைத்து பார்க்கையில், தான் கூறும் சதியின் பின்னணியில் உள்ள வெளிநாட்டு சக்திகள் பற்றி பொதுவாக குறிப்பிடுவது அர்த்தமற்றது.

கோட்டாபய குறிப்பிட்ட நபர்கள், நாடுகள் மற்றும் சதி எனப்படும் விதம் ஆகியவற்றைக் குறிப்பிட்டிருக்க வேண்டும் - என்றார்.

OruvanOruvan

MP Wimal Weerawansa

நூலில் உள்ள முக்கிய விடயங்கள்

வியாழன் (மார்ச் 07) இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச, 2022 இல் ஜனாதிபதி பதவியிலிருந்து தன்னை வெளியேற்றுவதற்கான போராட்டங்கள் தொடர்பான சம்பவங்களை விவரிக்கும் தனது புதிய புத்தகத்தை வெளியிட்டார்.

கோட்டாபய ராஜபக்ஷ தனது புத்தகத்தில், அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களின் போது அவர் அனுபவித்த சோதனைகள், அவர் வெளியேற்றம் மற்றும் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கும் நாட்டில் இயல்புநிலையை மீட்டெடுப்பதற்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விபரித்துள்ளார்.