இலங்கையைச் சேர்ந்த தாய், 4 குழந்தைகள் படுகொலை: ஒட்டாவா வீட்டு உரிமையாளர் வெளியிட்ட பல அதிர்ச்சித் தகவல்

OruvanOruvan

A mother, 4 kids and friend killed at Ottawa home

ஒரு பயங்கரமான படுகொலை நடந்த கனடாவின் ஒட்டாவா (Ottawa) டவுன்ஹவுஸின் வீட்டு உரிமையாளர், சம்பவம் நடந்த வீட்டில் ஆறு கொலைக் குற்றச்சாட்டுகளை தற்சமயம் எதிர்கொண்டுள்ள 19 வயது சந்தேக நபர் உட்பட ஏனையவர்கள் வசிப்பது தனக்கு தெரியாது என்று கூறியுள்ளார்.

35 வயதான தர்ஷனி ஏகநாயக்கவும் (Darshani Ekanayake), அவரது இரண்டரை மாத குழந்த‍ை உட்பட நான்கு குழந்தைகளும் வியாழக்கிழமை (07) இரவு வீட்டிற்குள் இறந்து கிடந்ததை அறிந்த ஹர்ப்ரீத் சாப்ரா (வீட்டு உரிமையாளர்) மெக்ஸிகோவில் இருந்து கனடியன் பிரஸ்ஸிடம் பேசும் போதே இந்த விடயத்தை கூறியுள்ளார்.

இனுகா விக்கிரமசிங்க என்ற ஏழு வயது மகனும் மற்றும் 4 வயதான அஷ்வினி, 3 வயதான ரன்யானா மற்றும் இரண்டரை மாதங்களான கெல்லி ஆகிய மூன்று மகள்களுமே சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் ஆவர்.

தாக்குதலில் இருந்து தப்பிய ஒரே நபரான குழந்தைகளின் தந்தை உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காமினி அமரகோன் முதியன்சேலாகே என்ற 40 வயதுடைய நபரும் சம்பவ இடத்திலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் இலங்கையில் இருந்து அண்மையில் வந்து குடும்பத்துடன் வசித்து வந்த குடும்ப நண்பர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வியாழன் அன்று, Algonquin கல்லூரியில் பயின்ற சர்வதேச மாணவரான பெப்ரியோ டி-சொய்சா (Febrio De-Zoysa) மீது ஆறு முதல்தரக் கொலைகள் மற்றும் ஒரு கொலை முயற்சியின் கீழ் பொலிசார் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தனர்.

அவர் மட்டுமே சந்தேக நபர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் இலங்கைப் பிரஜைகள் என்று அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.

தாக்குதலுக்கான நோக்கம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

OruvanOruvan

A mother, 4 kids and friend killed at Ottawa home

சம்பவம் குறித்து அறிந்ததும் நான் அதிர்ச்சியடைந்தேன்

ஒட்டாவா டவுன்ஹவுஸின் வீட்டு உரிமையாளர் ஹர்ப்ரீத் சாப்ரா வெள்ளிக்கிழமை (08) கனடியன் பிரஸ்ஸிடம் பேசுகையில்,

கடந்த ஜூன் அல்லது ஜூலையில் குறித்த குடும்பம் தன்னிடம் இருந்து வீட்டை குத்தகைக்கு எடுத்ததாக சாப்ரா கூறினார்.

தம்பதியருக்குப் புதிதாகக் குழந்தை பிறந்தது அல்லது மற்றவர்களும் அந்த வீட்டில் வசிக்கிறார்கள் என்பது தனக்குத் தெரியாது என்றார்.

வியாழன் (07) காலை 9 மணியளவில் விமான நிலையத்தில் இருந்தபோது என்ன நடந்தது என்பது குறித்து பொலிஸாரிடமிருந்து தனக்கு முதலில் அழைப்பு வந்தது.

நான் அதிர்ச்சியடைந்தேன், என் இதயம் அவர்களை எண்ணி வேதனை ‍அடைகிறது - என்றார்.

OruvanOruvan

Ottawa town house

இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் தகவல்

நீதிமன்ற ஆவணங்களில் தனுஷ்க விக்கிரமசிங்க என அடையாளம் காணப்பட்ட குடும்பத்தின் தலைவன், தனது குடும்ப உறுப்பினர்கள் சிலருக்கு கனடா வருவதற்கு விசா பெற்றுக்கொடுக்க முயற்சிப்பதாக இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

ஒட்டாவாவில் உள்ள நாட்டின் தூதரகத்தின் அமைச்சு ஆலோசகரான லஷிங்கா தமுல்லகே கூறுகையில், தனுஷ்க விக்கிரமசிங்கவின் தந்தை மற்றும் அவரது சகோதரருக்கு விசா பெற குடும்பத்திற்கு உதவ தூதரக அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர் - என்றார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒட்டாவாவில் அஞ்சலி

வியாழன் மாலை ஒட்டாவாவில் உள்ள ஒரு சிறிய பூங்காவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அயல் வீட்டார்களும் பொது மக்களும் கூடினர்.

அவர்கள் பூக்களையும், பொம்மைகளையும் கொண்டு வந்து மெழுகுவர்த்தி ஏற்றி, நான்கு குழந்தைகளை, அவர்களின் தாய்க்கு அஞ்சலி செலுத்தினர்.

OruvanOruvan

A child places flowers on a park table where flowers and teddy bears had been placed during a vigil for the six people killed, Thursday, March 7, 2024 in Ottawa