மொட்டுக்கட்சி கூட்டணியில் இருந்து விலகியவர்களை மீண்டும் இணைக்க முயற்சி: டளஸ் அணி உட்பட 7 அணிகளாக பிரிந்துள்ளனர்

OruvanOruvan

Wimal Weerawansa and Basil Rajapaksa Getty Images

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச அமெரிக்காவில் இருந்து இலங்கை திரும்பியுள்ள நிலையில், கட்சியை விட்டு விலகிச் சென்றுள்ள அணிகளை மீண்டும் ஒன்றிணைக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக பேசப்படுகிறது.

இது தொடர்பான அடிப்படை விடயங்களை ஆராயப்பட்டுள்ளதுடன் குறைந்தது 7 அணிகளாக பிரிந்துள்ள அணிகளை ஒன்றிணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மீண்டும் ஒன்றிணைத்துக்கொள்ளக் கூடிய நம்பிக்கையானவர்களை இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தும் பொறுப்பு ரஞ்சித் பண்டார மற்றும் ஜயந்த கெட்டகொட ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவான டளஸ் அழகப்பெரும, விமல் வீரவங்ச,மைத்திரிபால சிறிசேன,பிரசன்ன ரணதுங்க,நிமல் லன்சா,நாமல் ராஜபக்ச,நாலக கொடஹேவா ஆகியோர் தலைமையில் 7 அணிகளாக செயற்பட்டு வருகின்றனர்.